Site icon அநேகன்

டத்தோ டி மோகனுக்கு செனட்டர் பதவி! அடுத்து டத்தோஸ்ரீ வேள்பாரி, டத்தோ மோகனா முனியாண்டி

கோலாலம்பூர், நவ, 10-
ம.இ.கா.வின் உதவித் தலைவரான டத்தோ டி மோகனுக்கு செனட்டர் பதவி வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதற்கான உறுதி கடிதத்தையும் அவர் பெற்றுள்ளதாக தெரிகின்றது. பகாங் மாநில மஇகா தலைவர் டத்தோ குணசேகரனின் செனட்டர் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், அவருடைய செனட்டர் பதவி டத்தோ டி. மோகனுக்கு கிடைத்துள்ளது.
ம.இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவராக இருந்தப்போது, டத்தோ டி. மோகன் பலதரப்பட்ட சமுதாயச் சேவைகளில் களமிறங்கினார். குறிப்பாக சமூக, சமய பிரச்னைகளுக்கும் அவர் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். 
முன்னதாக 2008ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு  7376 வாக்குகளை பெற்றும் தோல்வி கண்டார். இருப்பினும் அவர் தமது சேவையை தொடர்ந்து முன்னெடுத்து வந்தார். இந்நிலையில், 2013ஆம் ஆண்டு நடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி கண்டார்.
 அதன் பிறகு ம.இ.கா. கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி கண்டதாக அறிவிக்கப்பட்டார். பின்னர் அந்த தேர்தல் செல்லாது என சங்கங்களில் பதிவிலாகா அதிரடியாக அறிவித்தது. பின்னர் மஇகாவில் நடந்த உட்பூசல் அனைவரும் அறிந்ததுதான். அப்போதுகூட தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்திற்கு விசுவாசமாக நடந்து கொண்டார்.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் கூட, மீஃபா எனும் மலேசிய இந்திய கால்பந்து குழுவை உருவாக்கி, எப்.ஏ.எம். கிண்ணத்தை வென்று, மலேசிய பிரிமியர் லீக்கில் அக்குழுவை இணைய வைத்து, மலேசிய இந்தியர்களுக்கு பெருமையை ஏற்படுத்தினார். இவை அனைத்திற்கு பரிசாக இந்த செனட்டர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக அவரின் விசுவாசிகள் கூறுகின்றார்கள்.
அவரை தொடர்ந்து, சிவபாக்கியம், டத்தோ பாராட் மணியம் ஆகியோரின் செனட்டர் பதவிகளும் காலியாக இருக்கின்றது. அது கட்சியின் தேசியப் பொருளாளர் டத்தோஸ்ரீ வேள்பாரி, மற்றும் மகளிர் பிரிவுத் தலைவி டத்தோ மோகனா முனியாண்டிக்கும் வழங்கப்படுவது உறுதியாகிவிட்டது. ம.இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரனுக்கு கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி கிடைக்கும் பட்சத்தில், கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வி.எஸ். மோகனில் நிலை என்ன என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
Exit mobile version