Site icon அநேகன்

2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி : செனகல் அணி தகுதி!

தகார், நவ.12 –

2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு செனகல் அணி தகுதிப் பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகுதிச்சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவும், செனகல் அணியும் மோதின. இப்போட்டியில், செனகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

செனகல் அணியின் தியாஃப்ரா சாகோ 12 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். 38-வது நிமிடத்தில் தென்னாப்பிரிக்காவின் தம்சன்கா மிகிசே எதிர் அணியினருக்கு ஒரு கோல் போட்டுக்கொடுத்தார். இந்த வெற்றியை தொடர்ந்து செனகல் அணி உலகக்கோப்பை போட்டிக்கு தகுதிப்பெற்றது.

இது செனகல் அணி பங்கேற்க இருக்கும் இரண்டாவது உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியாகும். முன்னதாக 2002 ஆம் ஆண்டில் ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதி சுற்றுவரை செனகல் அணி தகுதி பெற்றிருந்தது.

2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நாடுகள் விவரம்:-

ரஷியா (போட்டியை நடத்தும் நாடு), பிரேசில், ஈரான், ஐப்பான், மெக்சிகோ, பெல்ஜியம், தென் கொரியா, சவுதி அரேபியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், நைஜிரியா, கோஸ்டாரிகா, போலந்து, எகிப்து, ஐஸ்லாந்து, செர்பியா, போர்ச்சுகல், பிரான்ஸ், உருகுவே, அர்ஜென்டினா, கொலம்பியா, பனாமா, செனகல்.

இதுவரை 24 நாடுகள் தகுதி பெற்றுள்ளன. இன்னும் 8 நாடுகள் தகுதி பெற வேண்டும்.

Exit mobile version