Site icon அநேகன்

காரை மோதிய கொள்கலன் லாரி; தூக்கியெறியப்பட்ட இந்திய ஆடவர் பலி!

பாகான் செராய், நவ. 13-
தென் பகுதிக்கான பிளஸ் நெடுஞ்சாலையில் நின்றுக்கொண்டிருந்த வீரா ஏரோபேக் ரகக்காரை கொள்கலன் லாரி ஒன்று மோதியதில் அக்காரினுள் இருந்த இந்திய ஆடவர் தூக்கியெறியப்பட்டு துடிதுடித்து மாண்டார்.

இந்த துயர சம்பவம் தென் பகுதிக்கான பிளஸ் நெடுஞ்சாலையின் 182ஆவது கிலோமீட்டரில் மாலை மணி 5.57க்கு நிகழ்ந்தது. சம்பவத்தின் போது அந்த கார் நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஆபத்து அவசர வேலைக்கான தடத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்ததாக கூறப்படும் கொள்கலன் லாரி அக்காரை பலமாக மோதியது.

இதில் காரிலிருந்து வெளியே தூக்கியெறிப்பட்ட 45 வயதுதக்க இந்திய ஆடவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்ததாக பாகான் செராய் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவின் நடவடிக்கை பிரிவு தலைவர் நசீர் பின் வாஹாப் தெரிவித்தார். சம்பவத்தின் போது அந்த இந்திய ஆடவர் தனது காரின் ஓட்டுநர் இருக்கையில் உறங்கி கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. அந்த சமயத்தில்தான் இந்த விபரீதம் நிகழ்ந்ததுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு குழு விரைந்தது.

அதோடு, சம்பவ இடத்திற்கு வந்திருந்த மருத்துவ குழுவினர் அந்த இந்திய ஆடவர் உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்தினர். அதன் பின்னர் அவரது சடலம் போலீசின் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக நசீர் பின் வாஹாப் கூறினார்.

 

Exit mobile version