சென்னை, நவ.14 –
‘பாகுபலி’ திரைப்படத்தில் பாகுபலிக்கு ஈடாக மனதில் நின்றவர் பல்வாள் தேவன். இந்த கதாபாத்திரத்தின் மூலம் உலக சினிமா ரசிகர்களைத் தன் பார்வைக்கு ஈர்த்துக்கொண்டார் ராணா. கேரளாவிலும் ராணாவின் காட்டில் அடைமழைதான். பாகுபலி முதல் பாதி வெளியானபோதே அவரை தனது அடுத்த படங்களில் புக் செய்ய தயாரிப்பாளர்கள் கூட்டம் காத்திருந்தது.
இயக்குனர்கள் ராணாவை மலையாளத்தில் நடிக்க வைக்க விரும்பினர். ஆனாலும் நீண்ட நாட்களாக பிடிகொடுக்காமல் இருந்த ராணா, இப்போது முதன்முறையாக மலையாள படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளாரம்.
பிரபல இயக்குனர் கே. மது இயக்கும் அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்கிற வரலாற்று படத்தில் மார்த்தாண்ட வர்மாவாக நடிக்கிறார் ராணா. திருவாங்கூர் அரசர்களான மார்த்தாண்ட வர்மா மற்றும் கார்த்திகா வர்மா பற்றிய வரலாற்றுக்கதையாக இந்தப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. மீண்டும் பாகுபலியில் கிடைத்த கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் வருவார் பல்வாள் தேவன்.

