சென்னை, நவ.14 –
கடந்த வாரம் வெளியீடு கண்ட ‘அறம்’ திரைப்படம் அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் அப்படியே ஐக்கியமாகும் நயந்தாரா இந்த படத்திலும் தனது தனித்திறமையை மீண்டும் மெய்பித்துள்ளார்.
இதில் கலெக்டராக நடித்திருந்த நயன்தாராவின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகை அமலாபாலும் ‘அறம்’ படத்தை புகழ்ந்திருக்கிறார். இதுகுறித்து அவர் தன் டுவிட்டரில் நல்ல படம் ஜெயிக்கும் என்பது இந்த படத்தில் மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.
இயக்குனர் கோபி நயினார், நயன்தாராவுக்கு எனது பாராட்டுக்கள். ஸ்டார் ஹீரோக்களுக்காக மசலாத்தனாமாக இயக்கும் படங்களின் வரிசையில் இருந்து சற்று மாறுபட்டு வெற்றிபெற்றுள்ளது. ஆக, மசாலாத்தானமான் பார்முலா மட்டுமே சரி என்றும் கூறுவது தவறு என நிரூபித்துள்ளது இந்தப்படம் என்று அமலபால் கூறியுள்ளார்.
நல்ல சினிமா, நல்ல கதை, நல்ல நடிப்பு, இதுதான் முக்கிய விஷயமே” முன்ணி ஹீரோக்களை மட்டுமே துதிபாடி, புழந்து தள்ளி, எடுக்கபடும் படங்களுக்கு இது ஒரு சாட்டையடியாக இருக்கும் என்பது அவரது கருத்தாக இருக்கிறது.
இன்னும் ஆழ்துளாய் கிணற்றில் விழுந்த குழந்தைகளை காப்பாற்ற நிரந்தர தீர்வு கண்டுபிடிக்க முடியாத முக்கியமான பிரச்னையை மிகவும் தைரியமாக சொல்லியிருந்தார் இயக்குனர் கோபி நயினார்.

