Site icon அநேகன்

சிங்கப்பூர் எம்.ஆர்.டி. இரயில் மோதி 23 பேர் காயம்!

சிங்கப்பூர், நவ.15-
சிங்கப்பூரின் எம்.ஆர்.டி. இரயில் ஒன்று நின்று கொண்டிருந்த மற்றொரு இரயிலை மோதியதில் 23 பேர் காயமடைந்ததாக சிங்கபூரின் பொது தற்காப்பு குழு தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட இரயில் ஜூ கூன் எம்.ஆர்.டி. நிலையத்தில் ஓடாமல் நின்றுக்கொண்டிருந்த மற்றொரு இரயிலை இன்று காலை மணி 8.33 அளவில் மோதியதாக தனது முகநூல் பக்கத்தில் அக்குழு கூறியது.

இந்த சம்பவத்தால் காயமடைந்த பயணிகளுக்கு உடனடி சிகிச்சையை வழங்குவதற்காக சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த அக்குழு, சுமார் 23 பயணிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் சிறு காயங்களுக்கு மட்டுமே இலக்காகியதாகவும் அந்த பொது தற்காப்பு குழு குறிப்பிட்டது.

Exit mobile version