Site icon அநேகன்

அனைத்துலக நட்புமுறை ஆட்டம் – அர்ஜெண்டினா அதிர்ச்சி தோல்வி !

மாஸ்கோ, நவ.15 –

ரஷ்யாவில் நடைபெற்ற அனைத்துலக நட்புமுறை ஆட்டம் ஒன்றில் தென் அமெரிக்காவின் ஜாம்பாவன் அணியான அர்ஜெண்டினா 2- 4 என்ற கோல்களில் நைஜீரியாவிடம் வீழ்ந்தது. பார்சிலோனாவின் உச்ச நட்சத்திரம் லியோனெல் மெஸ்சியின்றி களமிறங்கிய அர்ஜெண்டினா, நைஜீரியாவிடம் மண்டியிட்டது அதன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் பாதி ஆட்டத்தின் 36 நிமிடங்களில் ஈவர் பனேகா, செர்ஜியோ அகுவேரோ மூலம் இரண்டு கோல்களைப் போட்ட அர்ஜெண்டினா 2 – 0 என்ற கோல்களில் முன்னணி வகித்தது.எனினும் முதல் பாதி ஆட்டம் முடிவடையும் தருவாயில் கெலச்சி இஹான்சியோ, நைஜீரியா அணியின் முதல் கோலைப் போட்டார்.

இரண்டாம் பாதியில் அர்செனல் அணியின் இவோபி இரண்டு கோல்களைப் போட்ட வேளையில் பிரையன் இடோவு மற்றொரு கோலைப் போட்டு நைஜீரியாவின் வெற்றியை உறுதிச் செய்தார்.

Exit mobile version