கோலாலம்பூர், நவ.15 –
4 ஆவது உலக தமிழர் திருநாள் விழா மற்றும் உலக தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் நிகழ்ச்சி வரும் ஜனவரி 5, 6, 7 ஆம் தேதிகளில் தமிழக தலைநகர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடை பெற விருக்கிறது. இந்திய துணை அதிபர் இந்த நிகழ்ச்சியை அதிகாரபூர்வமாக துவக்கி வைக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் சுமார் 1000 பேர் கலந்து கொள்ள விருக்கின்றனர்.
உலக தமிழர் திருநாள் விழா 8 அமர்வுகளாக நடை பெற விருக்கிறது . மாணவர்களின் பேச்சு போட்டி, இசை திருவிழா (Music Festival) , குறும்பட போட்டி, உணவு திருவிழா, கலை, கலாசாரம், பரதம், சிலம்பம், போன்ற நிகழ்வுகளும், சாதனை தமிழன் விருது , விளம்பர துறையில் அயலக தமிழ் பெண்கள் பங்கேற்கும் விதமாக மிஸ் தமிழ் யுனிவர்ஸ் (Miss Tamil Universe) போன்ற நிகழ்ச்சிகளும் நடை பெறவிருக்கின்றன.
இந்த விழாவில் உலக தமிழ் சட்டமன்ற, பாராளுமன்ற, சென்ட் சபை உறுப்பினர்கள், முதல்வர்கள், கவர்னர்கள், துணை முதல்வர்கள், மாநில மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் அயலக தமிழ் இசையமைப்பாளர்கள், குறும்பட தயாரிப்பவர்கள், விளம்பர துறையில் ஈடுபடும் பெண்கள் ஆகியோர்க்கு வாய்ப்பளிக்கும் விதமாகவும், உலக தமிழர்கள் தாய் தமிழகத்தில் சந்தோஷமான நிகழ்ச்சியாகவும், உலக தமிழர்களிடம் நேரடி தொடர்பு ஏற்படுத்தி அதன் மூலம் தமிழர்கள் வாழ்வியலை சிறப்பாக அமைத்து கொள்ள இவ்விழா நல்ல சந்தர்ப்பமாக அமையும் .
இதில் கலையுலகைச் சார்ந்த இசையமைப்பாளர்கள், நடிகர்கள் , இயக்குனர்கள், உலக தமிழ் ஊடக வியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் எனவும், இதில் மலேசியா தமிழர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள உள்ளனர் எனவும் செல்வகுமார் கூறினார்.
