Site icon அநேகன்

4 ஆவது முறையாக உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் ஆஸ்திரேலியா !

சிட்னி, நவ.16 –

2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதிப் பெற்றுள்ளது. புதன்கிழமை சிட்னியில் நடைபெற்ற பிலே ஆப் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 – 1 என்ற கோல்களில் ஹொண்டூரஸ் அணியை வீழ்த்தியது.

முதல் கட்ட ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்த வேளையில் இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 கோல்களைப் போட்டு அதிரடி படைத்தது. அந்த மூன்று கோல்களையும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிலே ஜெடினாக் போட்டு ஹாட்ரீக் சாதனையைப் படைத்துள்ளார்.

முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் 54 ஆவது நிமிடத்தில் மிலே ஜெடினாக் முதல் கோலைப் போட்டார். அதன் பின்னர் கிடைத்த இரண்டு பினால்டிகளையும் ஜெடினாக் கோலாக்கி ஆஸ்திரேலியா 3 – 0 என்ற நிலையில் முன்னணியில் வைத்தார். ஹொண்டூரஸ் அணியின் ஒரே கோலை எலிஸ் போட்டார்.

இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக நான்காவது முறை ஆஸ்திரேலியா உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பங்கேற்கவுள்ளது. ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் உறுப்பினராக இடம்பெற்றது முதல் ஆஸ்திரேலியா, 2006, 2010, 2014 ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பங்கேற்றது.

Exit mobile version