சென்னை, நவ.16 –
லக்ஷ்மி குறும்படத்திற்கு பிறகு இப்போது அனைவரின் கவனத்தை ஈர்த்திருப்பது இயக்குனர் பாலாவின் ”நாச்சியார்” திரைப்பட டீசர்தான். இசைஞானி இளையராஜாவின் இசையில், இயக்குனர் பாலாவின் இந்த படத்தின் டீசரை நடிகரும் ஜோதிகாவின் கணவருமான சூர்யா வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஜோதிகா என்றாலே நடிகை என்ற அந்தஸ்தையும் மீறி ஒரு மரியாதைகுரிய பெண்ணாகவே பார்க்கப்படுகிறார். தனக்கும் கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் நோக்கமே அவரது ரீ-என்ட்ரி. அதற்கு ஏற்றார்போல 36-வயதினிலே மற்றும மகளிர் மட்டும் கதாபாத்திரங்கள் இருந்தன. இப்போது மீண்டும் ஒரு படம், முக்கிய கதாபாத்திரம் ”நாச்சியார்”.
அதுபோல, தமிழ் சினிமாவில் உள்ளதை உள்ளபடி காட்டுவதிலும், நிதர்சனத்தைப் படம் பிடிப்பதிலும் ஒரு போது தன்னை சமரசரம் செய்துக்கொள்ளாத பாலா. ரத்தம், கோரம், அடிமட்டம், கஷ்டம், தத்ரூபம், கருணை, இது எல்லாம் நிறைந்தது தான் பாலாவின் படம். இப்போது, அவரின் நாச்சியார் திரைப்படதில் ஜோதிகா போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது இருவருக்குமே தீனிதான். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குற்றவாளியாக நடித்திருக்கிறார்.
இந்த வெறும் காட்சிகள் மற்றும் இசையோடு மட்டுமே பயணித்த இந்த டீசர் வசனங்கள் ஏதுமின்றி கடைசியில் ஒரு பீப் (கொச்சை) வார்த்தையுடன் முடிகிறது. அதனை ஜோதிகா பேசி இருப்பதுதான் இப்போது சர்ச்சையாகி பல விமர்சனங்களாக வருகிறது .
நல்ல தமிழ் வார்த்தைகள் கொச்சை வார்த்தைகளாகவும், ஆங்கில வார்த்தைகள் தமிழ் வாழ்த்தைகளாகவும் நம்மிடத்தில் எப்போதோ பழக்கப்பட்டுவிட்டன. இதில் இப்போது சிக்கியுள்ளார் ஜோ. சிவகுமார் வீட்டு மருமகள் இப்படி பேசலாமா, ஜோதிகா இதனை செய்யலாமா? தவிர்த்து இருக்கலாமே என்று டீசர் பார்த்து வாய் பிளர்ந்து அதில் ஜோவை அவலாக மென்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
இன்னொரு புறம் இது ஜோதிகாவிற்கு புதிய பரிணாமம். எப்போதும் போல சவால் நிறைந்த கேரக்டரை தேர்வு செய்துள்ளார், படத்தை பார்க்க தூண்டுகிறார் என்றும் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும், இது பாலாவின் படம் என்பதால் அது அப்படித்தான் இருக்கும் என்பது சினிமாவை ஆழ்ந்து நோக்கும் ரசனைக்கு புரியும்.
இதற்கு முன்பே ஜோதிகா , இயக்குனர் கெளதம் மேனனின் இயக்கத்தில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் வில்லி கதாபாத்திரகம் ஏற்றிருந்தார். இப்போது இதில் இன்னும் சாந்தமான முகம், தெனாவெட்டான பார்வை, போலீஸ்காரியின் வில்லத்தனம் என்று ஒரு கலவையாக வருகின்றார். காதலன் படத்தில் வரும் போலீஸ்காரியை மீண்டும் ஞாபகபடுத்திருக்கிறார் இந்த நாச்சியார்.
எப்படி இருந்தாலுமே, ஜோ பேசிய அந்த பீப் வார்த்தைதான் அத்தனை பேரையும் நாளை தியேட்டருக்கு அழைத்துவரும் என்ற பாலாவின் கணிப்பு இன்று உண்மையாகி விட்டது.
