Site icon அநேகன்

நவ.23இல் யூபிஎஸ்ஆர் முடிவுகள்!

கோலாலம்பூர், நவ.16-
இவ்வாண்டுக்கான யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள் இம்மாதம் 23ஆம் தேதி வெளியாகவிருப்பதாக கல்வியமைச்சு தெரிவித்தது.
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுதிய மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அதே நாளில் தத்தம் பள்ளிகளில் காலை 10.00 மணி தொடங்கி பெற்றுக் கொள்ளலாம் என அவ்வமைச்சு கூறியது.

யூ.பி.எஸ்.ஆர். தேர்வு முடிவுகளைக் குறுந்தகவல் வாயிலாகத் தெரிந்துக் கொள்ள விரும்புவோர் ‘mySMS என்று தட்டச்சு செய்து 15888 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். இந்தக் குறுந்தகவல் சேவை 23ஆம் தேதி காலை 10.00 மணி தொடங்கி 29ஆம் தேதி மாலை 6.00 மணி வரை செயல்படும் என்று ஓர் அறிக்கையில் அமைச்சு குறிப்பிட்டது.

இவ்வாண்டின் யூபிஎஸ்ஆர் தேர்வை நாடு முழுவதும் உள்ள 8,085 தேர்வு மையங்களில் 443,794 மாணவர்கள் எழுதியுள்ளனர்.

Exit mobile version