Site icon அநேகன்

உலகத் தரவரிசையில் முதலிடத்தைக் குறி வைக்கும் ரோஜர் பெடரர் !

லண்டன் , நவ.17 –

2018 ஆம் ஆண்டில் உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்க சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் இலக்குக் கொண்டுள்ளார். 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர் தற்போது உலகத் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்று வரும் ஏடிபி உலக டென்னிஸ் போட்டியின் இறுதி போட்டியில் அரையிறுதி சுற்று வரை பெடரர் முன்னேறியுள்ளார். இந்தப் போட்டியில் இருந்து நடால் விலகிக் கொண்டிருந்தாலும் ஆண்டின் இறுதி வரை அவர் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்வார்.

ஏடிபி உலக டென்னிஸ் போட்டியில் வெற்றியாளர் பட்டத்தை வென்றாலும் பெடரர் 140 புள்ளிகளில் இரண்டாவது இடத்தில் பின் தங்கியிருப்பார்.எனினும் 2018 ஆம் ஆண்டில் உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்க தாம் இலக்கு கொண்டுள்ளதாக பெடரர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய, விம்பிள்டன் டென்னிஸ் பட்டங்களை வென்று சாதனைப் படைத்துள்ள நடாலுக்கு தற்போது 36 வயதாகும். உலகத் தரவரிசையில் 302 வாரங்கள் முதலிடத்தைப் பிடித்து பெடரர் சாதனைப் படைத்துள்ளார்.

Exit mobile version