பெர்லின், நவ.18 –
2017/18 ஆம் பருவத்துக்கான ஜெர்மனி பண்டேஸ்லீகா கால்பந்துப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பொருசியா டார்ட்மூண்ட் தனது சொந்த அரங்கில் 1 – 2 என்ற கோல்களில் வி.எப்.பி ஸ்டூட்கார்டிடம் தோல்வி கண்டுள்ளது.
கடந்த ஐந்து லீக் ஆட்டங்களில் பொருசியா டார்ட்மூண்ட் நான்கு ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது. இந்த பருவத்தின் தொடக்கத்தில் முதல் ஏழு ஆட்டங்களில் பொருசியா டார்ட்மூண்ட், ஆறு ஆட்டங்களில் வெற்றி பெற்றது.எனினும் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி, பொருசியா எந்த ஓர் ஆட்டத்திலும் வெற்றி பெறவில்லை.
இதனால் பொருசியா டார்ட்மூன்ட் 20 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஜெர்மனி பண்டேஸ்லீகா போட்டியின் நடப்பு வெற்றியாளரான பாயேர்ன் மூனிக், முதலிடத்தில் உள்ளது.
ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்தில் ஸ்டூட்கார்ட்டின் முதல் கோலை சார்டாக் அக்கோலோ போட்டார். முன்னணி தாக்குதல் ஆட்டக்காரர் பியேரி எமெரிக் அபுமேயாங் இல்லாமல் களமிறங்கிய பொருசியா கோல் போடுவதில் சிரமத்தை எதிர்நோக்கியது. மாக்சிமிலியன் பிலிப்ஸ் போட்ட கோலின் மூலம் பொருசியா ஆட்டத்தை சமப்படுத்தியது.எனினும் இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய ஆறு நிமிடங்களில் ஜோசிப் பிரேகாலோ போட்ட கோல், ஸ்டூட்கார்ட் அணியின் வெற்றியை உறுதிச் செய்தது.
