பாரிஸ், நவ.18-
பிரான்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் நடப்பு வெற்றியாளரான ஏ.எஸ். மொனாக்கோ 1 – 1 என்ற கோலில் ஆமியேன்சுடன் சமநிலைக் கண்டது. இந்த ஆட்டத்தில் ஸ்டேபன் ஜோவிடிக் அடித்த கோலினால் மொனாக்கோ தோல்வியில் இருந்து தப்பியது.
ஆட்டத்தின் 31 ஆவது நிமிடத்தில் செர்ஜே காக்பே போட்ட கோலின் ஆமியேன்ஸ் 1 – 0 என்ற கோலில் முன்னணி வகித்தது. இரண்டாம் பாதியில் மாற்று ஆட்டக்காரராக நுழைந்த ஸ்டெபன் ஜோவிடிக் 67 ஆவது நிமிடத்தில் போட்ட கோலின் மூலம் மொனாக்கோ ஆட்டத்தை சமப்படுத்தியது.
