Site icon அநேகன்

இத்தாலி சிரி ஆ லீக் – யுவன்டசை வீழ்த்தியது சம்பாடோரியா!

மிலான், நவ.20 –

இத்தாலி சிரி ஆ லீக் போடிட்யில் சம்பாடோரியா 3 – 2 என்ற கோல்களில் யுவன்டசை வீழ்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோல்வியை அடுத்து நப்போலியை நெருங்கும் யுவன்டசின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் டுவான் சப்பாத்தா, லுக்காஸ் தோரேரா, கியான் மார்க்கோ பெராரி போட்டனர். ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் கன்சாலோ ஹிகுவாய்ன், பவ்லோ டியாபாலா, யுவன்டஸ் அணிக்கான இரண்டு கோல்களைப் போட்டனர்.

ஏ.சி மிலானை 2 – 0 என்ற கோல்களில் வீழ்த்திய நப்போலி நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் யுவன்டஸ் நிர்வாகி மசிமிலியானோ அலேகிரி வகுத்த வியூகம் அந்த அணிக்கு தோல்வியைத் தந்துள்ளது.

மூத்த கோல் காவலர் கியான்லூயூகி புஃபோன், ஆன்ட்ரியா பர்சாக்லிக்கு ஓய்வு வழங்கியிருந்தார். அதேவேளையில் முன்னணி தாக்குதல் ஆட்டக்காரர் பவ்லோ டியாபாலாவையும் மாற்று ஆட்டக்காரர் பட்டியலில் இடம்பெற செய்திருந்தார்.

Exit mobile version