வோட்போர்ட், நவ.20 –
வெஸ்ட் ஹேம் யுனைடெட் கிளப்பின் புதிய நிர்வாகியான டேவிட் மோயேஸ் தோல்வியுடன் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெஸ்ட் ஹேம் யுனைடெட் 0-2 என்ற கோல்களில் வோட்போர்ட்டிடம் தோல்வி கண்டது.
சிலவன் பிலீச்சுக்குப் பதில் டேவிட் மோயேஸ் நிர்வாகியாகப் பொறுப்பேற்றிருந்தாலும் அவரின் வருகை வெஸ்ட் ஹேம் யுனைடெட்டுக்கு சிறந்த தொடக்கத்தை அளிக்கவில்லை.
11 ஆவது நிமிடத்தில் வில் ஹியூஸ் , வோட்போர்ட் அணியின் முதல் கோலைப் போட்ட வேளையில் 64 ஆவது நிமிடத்தில் ரிக்கார்லிசன் இரண்டாவது கோலைப் புகுத்தினார். கடந்த ஐந்து லீக் ஆட்டங்களில் வெஸ்ட் ஹேம் யுனைடெட் 3 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது.
வோட்போர்ட்டுக்கு எதிரான ஆட்டம் தமக்கு ஒரு சிறப்பான துவக்கமாக இருக்கும் என எதிர்பார்த்ததாக டேவிட் மோயேஸ் தெரிவித்தார். ஆனால் வோட்போர்ட்டுக்கு எதிரான தோல்வியில் இருந்து வெஸ்ட் ஹேம் யுனைடெட் நிச்சயம் மீட்சிப் பெறும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
