Site icon அநேகன்

இத்தாலி கால்பந்து சம்மேளனத் தலைவர் பதவியில் இருந்து விலகினார் தவேச்சியோ!

ரோம், நவ.21 –

2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்குத் தகுதிப் பெறுவதில் இத்தாலி தோல்வி கண்டதை அடுத்து இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவர் கார்லோ தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இத்தாலி அணி பிளேஆஃப் சுற்றில் சுவீடன் அணியை தொடர்கொண்டது.  சுவீடனின் சொந்த அரங்கில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சுவீடன் 1-0 என வெற்றி பெற்றது. பின்னர் இத்தாலியில் நடைபெற்ற 2 ஆவது ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் ஏதுமின்றி சமநிலைக் கண்டன.

இதனையடுத்து இத்தாலி 2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்குத் தேர்வு பெறுவதில் தோல்வி கண்டது. 1958 ஆம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 60 ஆண்டுகள் கழித்து இத்தாலி உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெற முடியாமல் ஏமாற்றம் அளித்தது.

பிலே ஆப் சுற்று ஆட்டம் முடிந்ததும், அந்த அணியின் கேப்டனும் தலைசிறந்த கோல் கீப்பரும் ஆன கியான்லுயூகி புஃபோன் அனைத்துலகப் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவரான கார்லோனா தவேச்சியோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த புதன்கிழமை இத்தாலி அணி பயிற்சியாளரான ஜியான் பியோரா அதிரடியாக நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version