Site icon அநேகன்

2050 ஆம் ஆண்டில் பொருளாதார வல்லரசு நாடுகளில் மலேசியாவும் இடம்பெறும்!

கூச்சிங், நவ.21 – 

2050 ஆம் ஆண்டில் உலகின் 20 பொருளாதார வல்லரசு நாடுகளின் பட்டியலில் மலேசியா நிச்சயம் இடம்பிடிக்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் வலுவுடன் இருப்பதுடன் மலேசிய இலக்கவியல் கொள்கை உட்பட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களின் மூலம் மலேசியா அந்த நிலையை அடைய முடியும் என நஜிப் தெரிவித்தார்.  சரவா, கூச்சிங்கில் செவ்வாய்கிழமை 13 ஆவது இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் உரையாற்றியப் போது நஜிப் இவ்வாறு கூறினார்.

2050 ஆம் ஆண்டில் நாடு பொருளாதார வல்லரசாக உருமாற்றம் பெற,   நாட்டின் இலக்கவியல் பொருளாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும். மலேசிய இலக்கவியல் கொள்கை அதற்கு அடிப்படையாக விளங்கும் என நஜிப் கூறினார். இந்த கொள்கையின் மூலம் மொத்த உள்நாட்டு வருமானத்தை 20 விழுக்காடு அதிகரிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

 

 

 

Exit mobile version