Site icon அநேகன்

சாம்பியன்ஸ் லீக் – எச் பிரிவில் முதலிடத்தை தக்க வைத்தது டோட்டேன்ஹம்!

டார்ட்மூண்ட், நவ.22 –

ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் எச் பிரிவில் இங்கிலாந்தின் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் தனது முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. செவ்வாய்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் 2 – 1 என்ற கோல்களில் பொருசியா டார்ட்மூண்ட் அணியை வீழ்த்தியது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஹாரி கேன், ஹியூங் மிங் சொன் போட்ட இரண்டு கோல்களின் மூலம் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் 13 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை உறுதிச் செய்துள்ளது.

முதல் பாதி ஆட்டத்தின் 31 ஆவது நிமிடத்தில் பியேரி அபுமேயாங் போட்ட கோலால் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் பின் தங்கியது.எனினும் இரன்டாம் பாதி ஆட்டத்தின் 49 ஆவது நிமிடத்தில் ஹாரி கேன் ஒரு கோலைப் போட்டு ஆட்டத்தை சமப்படுத்தினார். 76 ஆவது நிமிடத்தில் தென் கொரியாவின் சொன் அடித்த கோல், டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரின் வெற்றியை உறுதிச் செய்தது.

Exit mobile version