Site icon அநேகன்

பெட்ரோல் விலை 8 காசு குறைந்தது!

கோலாலம்பூர், நவ.22-

நவம்பர் மாத இறுதியில் பெட்ரோல் விலை 8 காசு குறைந்துள்ளது. இந்த மாதம் தொடக்கம் முதல் ஏற்றம் கண்டு வந்த பெட்ரோல் விலை அடுத்த வாரம் முழுவதும் 8 காசு குறைந்து 2.30 காசாக விற்கப்படும்.

முன்னதாக கடந்த வாரம் முழுக்க 2.38 காசாக விற்கப்பட்ட ரோன் 95 பெட்ரோல் விலை 8 காசு குறைந்து 2.30 காசுக்கு விற்கப்படும் வேளையில் ரோன் 97 பெட்ரோல் விலையும் 8 காசு குறைந்து அடுத்த வாரம் புதன்கிழமை நள்ளிரவு வரை 2.58 காசுக்கு விற்கப்படும்.

டீசல் விலை 2 காசு குறைந்து 2.23 காசுக்கு விற்கப்படும். தொடர்ந்து 5 வாரங்களாக ஏற்றம் கண்டு வந்த பெட்ரோல் விலை, நவம்பர் இறுதி வாரத்தில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version