டெல்லி: நடிகையுடன் நித்தியானந்தா இருக்கும் வீடியோ உண்மைதான் என்று வீடியோவை ஆராய்ந்த டெல்லி தடய அறிவியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. நடிகையுடன் நித்தியானந்தா இருக்கும் வீடியோ 2010ல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. ஆனால் தாம் இருக்கும் வீடியோ பொய் என்று நித்தியானந்தா மறுத்து வந்தார்.
லெனின் கருப்பன் பேட்டி:
நித்தியானந்தா வீடியோ சித்தரிக்கப்பட்டது அல்ல என்பது நிரூபணமானது என்று லெனின் கருப்பன் பேட்டி அளித்துள்ளார். மேலும் நித்தியானந்தாவின் உண்மை முகம் வீடியோ மூலம் அம்பலமாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
டிசம்பர் 5ம் தேதி நித்தியானந்தா வீடியோ வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நித்தியானந்தா ஆசிரமம் நிர்வாகிகள் தம் மீது 19 வழக்குகள் போட்டுள்ளனர் என்று லெனின் கருப்பன் கூறியுள்ளார்.
