Site icon அநேகன்

கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ரோபேன் ?

மூனிக், நவ.24-

இந்த பருவத்தின் இறுதியில் பாயேர்ன் மூனிக் மத்திய திடல் ஆட்டக்காரர் ஆர்யன் ரோபேன், கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்குத் தகுதி பெறுவதில் ஹாலந்து தோல்வி கண்டதை அடுத்து 33 வயதுடைய ரோபேன் அனைத்துலக போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றார்.

இந்நிலையில் பாயேர்ன் மூனிக் கிளப்புடனான ஒப்பந்தம் ஜூன் மாதம் முடிவடைந்ததும், ரோபேன் கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறக்கூடும் என கூறப்படுகிறது. எதிர்காலம் குறித்து தம்மால் முடிவு செய்ய இயலவில்லை என ரோபேன் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறலாம் அல்லது இன்னும் மூன்று ஆண்டுகள் பாயேர்ன் கிளப்பில் தொடர்ந்து விளையாடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். செல்சி, ரியல் மெட்ரிட் கிளப்புகளிலும் விளையாடியுள்ள ரோபேன், பாயேர்ன் மூனிக் கிளப்புடன் ஆறு பண்டேஸ்லீகா பட்டங்களுடன் ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணத்தையும் வென்றுள்ளார்.

Exit mobile version