Site icon அநேகன்

யூரோப்பா லீக் – எவெர்டனைப் பந்தாடியது அட்லாந்தா !

எவெர்டன், நவ.24 –

யூரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் எவெர்டன் மீண்டும் படுதோல்வியை சந்தித்துள்ளது. வியாழக்க்கிழமை நடைபெற்ற ஈ பிரிவுக்கான ஆட்டத்தில் எவெர்டன் 1 – 5 என்ற கோல்களில் இத்தாலியின் அட்லாந்தாவிடம் படுதோல்வி அடைந்துள்ளது.

அட்லாந்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் எவெர்டன் கிளப்பின் இடைக்கால நிர்வாகி டேவிட் அன்சோர்த் பலம் வாய்ந்த அணியை களமிறக்கினார். 12ஆவது நிமிடத்தில் பிரையன் கிறிஸ்தாந்தே போட்ட கோலின் மூலம் அட்லாந்தா முன்னணிக்கு சென்றது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் அட்லாந்தாவுக்கு கிடைத்த பினால்டியை எவெர்டன் கோல் காவலர் ஜோல் ரோப்லேஸ் தடுத்து நிறுத்தினார். எனினும் 63 ஆவது நிமிடத்தில் கிறிஸ்தாந்தே இரண்டாவது கோலைப் போட்டு அட்லாந்தாவின் நிலையை மேலும் வலுவாக்கினார்.

71 ஆவது நிமிடத்தில் ரமிரேஸ் எவெர்டன் அணிக்கு ஒரு கோலைப் போட்டிருந்தாலும் கடைசி 6 நிமிடங்களில் 3 கோல்களைப் போட்டு எவெர்டன் மிகப் பெரிய வெற்றியை உறுதிச் செய்தது. இந்த வெற்றியின் மூலம் அட்லாந்தா 11 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. எவெர்டன் ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

Exit mobile version