ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 16, 2018
அண்மையச் செய்திகள்
அரசியல்முதன்மைச் செய்திகள்

முன்னாள் தகவல் அமைச்சர் டான்ஸ்ரீ ஸைனுடின் மைடின் காலமானார்

கோலாலம்பூர், டிச. 14 முன்னாள் தகவல் அமைச்சர் டான்ஸ்ரீ ஸைனுடின் மைடின் இன்று காலமானார். 79 வயதான டான்ஸ்ரீ ஸைனுடின் நுரையீரல் பிரச்னையின் காரணமாக புத்ரா ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த நவம்பர் 12ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு நுரையீரலில் நீர் கோர்த்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர், செர்டாங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்று அவர் காலமானார். ஸாம் என்று அழைக்கப்படும்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

ஆலயம், மதமாற்றுப் பிரச்சினையை கவனிக்கத் தவறினார்! மோகன் ஷாண் நிராகரிக்கப்பட வேண்டும்! ஆயுட்கால உறுப்பினர் சிவசுப்பிரமணியம் சூளுரை

கோலாலம்பூர், டிச.14- மலேசிய இந்து சங்கத்தை திசை மாற்றிக் கொண்டிருக்கும் நடப்புத் தலைவர் டத்தோ மோகன் ஷாண் தலைமைத்துவ பொறுப்புக்கு தகுதியற்றவர் என்று அதன் ஆயுட்கால உறுப்பினர் சிவசுப்பிரமணியம் சாடியுள்ளார். மலேசிய இந்து சங்கத்தில் தலைமைத்துவ மாற்றம் கண்டிப்பாக தேவை. டத்தோ மோகன் ஷாண் தலைமையிலான இப்போதைய தலைமைத்துவம் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறது. தேவாரப் போட்டி நடத்துவதும் திருமுறை ஓதும் போட்டி நடத்துவதும் அதன் வேலையல்ல. மாறாக

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

மீண்டும் பிகேஆர் உதவித் தலைவராக ரபிஸியா?

கோலாலம்பூர், டிச. 13 பிகேஆர் தேசிய உதவித் தலைவராக ரபிஸி ரம்லி மீண்டும் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 2018 2021 தவணைக்கான பிகேஆர் தலைமைத்துவத்தின் பதவிகளுக்கு நியமனம் செய்யப்படுவோரில் இவரும் அடங்குவார் என கூறப்படும் வேளையில் இதனை தாம் நிராகரிக்கவில்லை என பிகேஆர் தொடர்பு துறை தலைவர் பாபி பட்சில் தெரிவித்துள்ளார். கட்சிக்கு ஆதரவு வழங்கும் தனி நபர்களுக்கு தகுந்த பதவி வழங்க தாம் தயாராக இருப்பதாக பிகேஆர் தேசியத்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

யூடிசி சேவை நேரம் மாற்றம்

கோலாலம்பூர், டிச.13- யூடிசி எனப்படும் புறநகர் உருமாற்ற மையத்தின் சேவை நேரம் ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி மாற்றப்பட்டுள்ளது. தீபகற்ப மலேசியா, சபா, சரவா மாநிலங்களிலும் செயல்படும் யூடிசி மையங்களின் சேவை நேரம் தினசரி காலை 8 மணி தொடங்கி இரவு 7.00 மணி வரை நீடிக்கும். தற்போது யூடிசி மையங்கள் இரவு 10.00 மணி வரை திறந்துள்ளன. தீபகற்ப மலேசியாவில் உள்ள யூடிசி மையங்களில் ஓய்வு நேரம் அல்லது

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

பிடி3 தேர்வில் இந்திய மாணவர்கள் சாதனை

கோலாலம்பூர், டிச. 13 நாடு முழுவதிலும் பிடி3 தேர்வு எழுதிய இந்திய மாணவர்கள் பலர் சிறந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதிகமான மாணவர்கள் 10ஏ, 9ஏ, பெற்றதோடு சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று பள்ளிக்கும், பெற்றோருக்கும் சமுதாயத்திற்கும் பெருமை தேடி தந்துள்ளனர். பேரா, கெடா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜோகூர் போன்ற மாநிலங்களில் உள்ள இந்திய மாணவர்கள் இந்தப் பிடி3 தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்று அதிரடி சாதனை

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

விடுதி கொள்முதல் விவகாரத்தில் இசா சாமாட் மீது நாளை குற்றச்சாட்டு

புத்ராஜெயா, டிச.13 எஃப்ஐசி எனப்படும் பெல்டா இன்வெஸ்ட்மெண்ட் கார்பரேஷன் நிறுவனத்தினால் விடுதி கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பெல்டா முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ முகமது ஈசா அப்துல் சாமாட் நாளை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கூறியது. முகமது ஈசா இன்று இங்குள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் காணப்பட்டதாகவும் நாளை நீதிமன்றத்தில் தாம் ஆஜராவதற்கான உறுதிமொழி கடிதத்தில் கையெழுத்திடுவதற்காகவே இவர் அங்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. தனது

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

மலேசியா சுசூக்கி கிண்ண போட்டி; அளவுக்கதிகமான ஆதரவாளர்கள் திரண்டது ஏன்? போலீஸ் விசாரணை

கோலாலம்பூர், டிச.12- புக்கிட் ஜாலில் அரங்கில் மலேசியாவிற்கும் வியட்னாமிற்கும் இடையே நேற்று நடந்த சுசூக்கி கிண்ண முதல் கட்ட இறுதி ஆட்டத்தைக் காண அளவுக்கதிகமான ஆதரவாளர்கள் திரண்டது தொடர்பில் தேசிய போலீஸ் படையின் புலன் விசாரணைக்கு மலேசிய காற்பந்தாட்ட சங்கம் ஒத்துழைப்பு நல்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டு தொடர்பில் தமது தரப்பு செராஸ் மாவட்ட போலீஸ் தலைமையக பிரதிநிதியுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டுள்ளதாக எஃப்ஏஎம் தலைமைச் செயலாளர் மைக்கல் ராமலிங்கம்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய்

கோலாலம்பூர், டிச 12- மெர்சல் படத்திற்காக சிறந்த சர்வதேச நடிகருக்கான ஐஏஆர்ஏ விருது லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது. IARA எனப்படும் சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் என்ற அமைப்பு சர்வதேச அளவில் கலைஞர்களை கவுரவித்து வருகின்றது. நாடகம், சினிமா, இசை, தொலைக்காட்சி ஆகிய துறைகளில் மொத்தம் 24 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஐஏஆர்ஏ விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. மெர்சல் படத்தில்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

ரஜினியின் 2.0 : மலேசியாவில் 1 கோடியே 60 லட்சம் வசூல் சாதனை!

கோலாலம்பூர், டிச. 12 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் அண்மையில் திரையீடு கண்ட 2.0 திரைப்படம் உலக அளவில் மிகப் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி வருகின்றது. மலேசியாவிலும் இத்திரைப்படம் மிகப் பெரிய வசூல் வேட்டையை நடத்தியுள்ளது. குறிப்பாக இதுவரையில் (டிசம்பர் 11) 1 கோடியே 60 லட்சம் வெள்ளியை இத்திரைப்படம் வசூலித்திருப்பதாக 2.0 திரைப்படத்தை மலேசியாவில் வெளியீடு செய்த DMY கிரியேசன்ஸ் நிறுவனம்

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

சீபில்ட் ஆலய கலவர விவகாரம்; 13 பேர் மீது குற்றச்சாட்டு

கிள்ளான், டிச. 12 சுபாங் ஜெயா, சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரம் தொடர்பில் இதுவரை 13 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று 8 பேர் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்படும் என்றும் சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர் தெரிவித்தார். குற்றவியல் சட்டம் பிரிவு 148, குற்றவியல் சட்டம் பிரிவு 325இன் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் இதுவரை கைது செய்யப்பட்ட

மேலும் படிக்க