திங்கட்கிழமை, அக்டோபர் 22, 2018
அண்மையச் செய்திகள்
முதன்மைச் செய்திகள்

ம.இ.கா. தேர்தல் – துணைத் தலைவர் தேர்தலில் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் வெற்றி !

கோலாலம்பூர் , அக்.21 - மலேசிய இந்தியர் காங்கிரஸ் ( ம.இ.கா) உயர் மட்ட பதவிகளுக்கான தேர்தலில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் வெற்றி பெற்றுள்ளார். துணைத் தலைவர் தேர்தலில் ,பிரபல தொழிலதிபர் டான் ஶ்ரீ எம். ராமசாமியை விட 3, 500 வாக்குகள் பெரும்பான்மைப் பெற்று சரவணன் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் துணைத் தலைவர் உட்பட இதர பதவிகளுக்கான தேர்தல் முடிவுகளை ம.இ.கா.

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

கோயிலின் ஐதீகத்தில் யாரும் தலையிடக் கூடாது – ரஜினிகாந்த் !

சென்னை: கோயிலின் ஐதீகத்தில் யாரும் தலையிடக் கூடாது என்று சபரிமலை குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் யாரும் நுழையக் கூடாது என்பது காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபு ஆகும். இந்த மரபை மாற்றும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து தீர்ப்புக்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐப்பசி மாதத்தையொட்டி கோயில் நடைத் திறப்புக்காக வந்த பெண்கள்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் 1 எம்.டி.பி பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் – லிம் கிட் சியாங் !

நீலாய், அக்.20- தேசிய முன்னணியின் உறுப்பு கட்சிகள், தாங்கள் பெற்ற ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என  டி.ஏ.பி கட்சியின் ஆலோசகர் லிம் கிட் சியாங் வலியுறுத்தியுள்ளார். இதன் வழி அரசாங்கம் அந்த பணத்தை மீண்டும் மக்களிடமே ஒப்படைக்க முடியும் என்று அவர் சொன்னார். 2013 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் இருந்து தேர்தல் நிதியைப் பெற்றிருப்பதாக

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

மின் கட்டணத்தை அரசாங்கம் உயர்த்தாது – யோ பி யின் !

கோலாலம்பூர், அக்.20 - நாட்டில், தற்போது மின்சார கட்டணத்தை  உயர்த்த அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை என  எரிபொருள், அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் யோ பி யின் தெரிவித்துள்ளார்.  எனினும் ம்க்கள் சிக்கனத்துடன் மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பமாகும் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டு மக்கள், மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்துவதற்காக, மின்சாரக் கட்டணத்தை உயர்த்துமாறு, மின் உற்பத்தியாளர்கள் பரிந்துரை செய்திருக்கின்றனர் .

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

10 ஆண்டுகளுக்குப் பிறகு மைக்கியில் புதிய தலைமைத்துவம் ; டத்தோ கோபாலகிருஷ்ணன் அணி வென்றது !

கோலாலம்பூர், அக்.20 - மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தில் ( மைக்கி) 10 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமைத்துவ மாற்றம் ஏற்பட்டுள்ளது.  சனிக்கிழமை நடைபெற்ற அச்சம்மேளனத்தின் 2018 முதல் 2021 ஆம் தவணைக்கான தேர்தலில் நடப்பு தலைவர் டான் ஶ்ரீ கென்னத் ஈஸ்வரன் தோல்வி கண்டுள்ளார். கென்னத் ஈஸ்வரனை எதிர்த்து போட்டியிட்ட டத்தோ என். கோபாலகிருஷ்ணன் 111 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதேவேளையில் டான் ஶ்ரீ கென்னத் ஈஸ்வரன்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ பீட்டர் வேலப்பன் காலமானார் !

கோலாலம்பூர், அக்.20 - ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ பீட்டர் வேலப்பன் இன்று காலை காலமானார்.  ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் நடப்பு தலைமைச் செயலாளர் டத்தோ வின்சோர் போல் ஜோன் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த அக்டோபர் முதல் தேதி 83 வயதை எட்டிய டத்தோ பீட்டர் வேலப்பனுக்கு டத்தின் பவளம் என்ற மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். நெகிரி செம்பிலானின் சிலியாவில் பிறந்த பீட்டர்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

சைபர்ஜெயாவில் நிகழ்ந்த விபத்து தொடர்பில் நால்வர் கைது !

சிப்பாங், அக்.19 - சைபர்ஜெயாவில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த விபத்து ஒன்று தொடர்பில் காவல்துறை மூன்று அந்நிய நாட்டவர்களையும் , உள்நாட்டைச் சேந்த பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சைபர்ஜெயாவில் உள்ள அனைத்துலக பல்கலைகழகத்தில் பயிலும் மாணவர்கள் என சிப்பாங் மாவட்ட காவல்துறை தலைவர் ஏ.சி.பி அப்துல் அசிஸ் தெரிவித்துள்ளார். புதன்கிழமை இரவு நிகழ்ந்த அந்த விபத்தில் தனியார்  தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றில் துணை நிர்வாகி பணி

மேலும் படிக்க
விளையாட்டு

வரும் ஜனவரி மாதம் மீண்டும் கால்பந்து விளையாட்டுக்குத் திரும்புகிறார் வெங்கர் !

பாரிஸ், அக்.18 - அர்செனல் கால்பந்து கிளப்பின் முன்னாள் நிர்வாகி ஆர்சன் வெங்கர் வரும் ஜனவரி மாதம் மீண்டும் கால்பந்து விளையாட்டுக்கு திரும்பவிருப்பதாக ஜெர்மனி விளையாட்டு நாளிதழான பில்ட் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் வெங்கர் எந்த அணியில் நிர்வாகி பொறுப்பை ஏற்பார் என்பது இன்னும் உறுதியாகவில்லை என பில்ட் குறிப்பிட்டுள்ளது. 22 ஆண்டுகள் அர்செனல் கிளப்பை வழி நடத்திய ஆர்சன் வெங்கர் கடந்த மே மாதம் அந்த கிளப்பின் நிர்வாகி

மேலும் படிக்க
விளையாட்டு

2020 ஈரோ போட்டிக்குத் தகுதிப் பெற நெதர்லாந்து இலக்கு !

ஆம்ஸ்டர்டாம், அக்.18 -  2020 ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய கிண்ண கால்பந்துப் போட்டிக்குத் தகுதிப் பெற நெதர்லாந்து இலக்குக் கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான லீக் போட்டியில் ஜெர்மனி, பிரான்ஸ் அணிகளுக்கு எதிராக மேலும் அதிகமான புள்ளிகளைப் பெற நெதர்லாந்து திட்டமிட்டுள்ளதாக அதன் பயிற்றுனர் ரோனால்ட் கூமன் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் நெதர்லாந்து 3 - 0 என்ற கோல்களில் ஜெர்மனியை வீழ்த்தியது,

மேலும் படிக்க
விளையாட்டு

லிவர்பூல் ஆட்டக்காரர் நாபி கெய்தா காயம் !

ருவாண்டா, அக்.17- லிவர்பூல் கால்பந்து கிளப்பின் முன்ன்ணி நட்சத்திரமான நாபி கெய்தா , கினி தேசிய கால்பந்து அணியுடனான ஆட்டத்தின்போது காயம் அடைந்துள்ளார். இதனால் அவர் பிரீமியர் லீக் போட்டியில் லிவர்பூல் அணிக்கு தொடர்ந்து விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆப்ரிக்க கிண்ண கால்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் கினிக்கும் ருவாண்டாவுக்கும் இடையிலான ஆட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் நாபி கெய்தாவுக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டதை கினி

மேலும் படிக்க