ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 16, 2018
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை
மற்றவைமுதன்மைச் செய்திகள்

கடை வீட்டில் பயங்கர தீ; அறுவர் பலி

ஈப்போ, டிச.11 ஜெலாப்பாங் மாஜூ ஜாலான் புஞ்சாக் ஜெலாப்பாங் 3இல் உள்ள இரண்டு மாடி கடைவீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று பகல் 2.55 மணியளவில் நிகழ்ந்த இத்தீவிபத்தில் ஓர் இந்திய ஆடவரும் 5 மலாய்காரர்களும் மரணமுற்றதாக இதுவரை கிடைத்த தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. தகவல் கிடைத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது அந்த கடை வீட்டில் 40 விழுக்காடு தீயில்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

சுசூக்கி கிண்ணப் போட்டி: எல்ஆர்டி, எம்ஆர்டி ரயில் சேவை பின்னிரவு 1.00 மணி வரை நீட்டிப்பு

கோலாலம்பூர், டிச 9 ஏஎப்எப் சுசுக்கி கிண்ணப் போட்டியை முன்னிட்டு ஸ்ரீ பெட்டாலிங் எல்ஆர்டி மற்றும் சுங்கை பூலோ எம்ஆர்டி சேவைகள் செவ்வாய்க்கிழமை பின்னிரவு 1.00 மணி வரை நீட்டிக்கப்படும் என்று பிராசாரானா (ம) பெர்ஹாட் நிறுவனத்தின் தொடர்புத் துறைக் குழு மற்றும் சந்தை வியூகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில் மஸ்ஜிட் ஜாமெக், பிளாஸா ராக்யாட், பாசார் செனி மற்றும் மலூரி ஆகிய நிலையங்களில் மாறிக் கொள்வது உட்பட எல்ஆர்டி

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

ரொம்பின், டிச 9 கோல ரொம்பின், குவாந்தான் பாரு நெடுஞ்சாலையின் 131.20.ஆவது கிலோ மீட்டர் தொலைவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புதிதாக திருமணமான தம்பதியர் உட்பட 4 சகோதரர்கள் பெரோடுவா வீவா காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது விரைவு பேருந்தை மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் துணை சூப்ரிண்டென்டன் அஸ்லி முகமட் நோர் தெரிவித்தார்.

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

கூச்சிங் பேரங்காடியில் எரிவாயு கலன் வெடிப்பு; மூவர் பலி;32 பேர் காயம்

கூச்சிங், டிச. 4 கூச்சிங்கிலுள்ள சிட்டி ஒன் மெகாமால் பேரங்காடியில் எரிவாயு கலன் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 32 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த 32 பேரில் 7 பேர் கடுமையான காயத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகலில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் காயமடைந்த 32 பேரும் சிகிச்சைகாக சரவாக் பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். அந்தப் பேரங்காடியின் கீழ்தளத்தில் உணவக வளாகத்தில் சீரமைப்புப்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

போலீஸ்காரரை தாக்கிய ஆடவர் சுட்டுக் கொலை

ஜோர்ஜ்டவுன், நவ. 23 கொம்தார் கட்டடம் அருகே போலீஸ்காரரை கத்தியால் தாக்கிய இந்திய நபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று மதியம் 3.15 மணியளவில் கொம்தார் போலீஸ் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த கார்ப்பரல் முகமட் ஹபிஸி முகமட் அஹிர் அந்த 41 வயது நபரை சுட்டதாக ஜோர்ஜ்டவுன் போலீஸ் தலைவர் ஏசிபி செ ஜென்மானி செ அவாங் தெரிவித்தார். 7அங்குலம் நீளம் கொண்டிருந்த கத்தியால் அந்த நபர் அந்த போலீசாரை

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

செனாவாங்கில் 3 லோரிகள் மோதல்: ஒருவர் பலி

சிரம்பான், நவ.21 செனாவாங் டோல் சாவடிக்கு அருகே தெற்கே நோக்கிச் செல்லும் பிளஸ் நெடுஞ்சாலையின் 254.3ஆவது கிலோ மீட்டர் தொலைவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார். இன்று அதிகாலை 5.46 மணிக்கு 3 லோரிகள் மோதிக் கொண்ட சம்பவத்தில் ஒருவர் மரணமுற்ற வேளையில் மற்றும் ஒருவர் காயமுற்றதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் தியூ ஹொக் போ தெரிவித்தார். இது உண்மையில் 2 டிரெய்லர் லோரிகள் மற்றும் 1

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

நவம்பர் 29இல் யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள்

கோலாலம்பூர், நவ.20 ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான மதிப்பீட்டு அறிக்கை (பிபிஎஸ்ஆர்) உட்பட யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள் எதிர்வரும் 29ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர், டத்தோ டாக்டர் அமின் செனின் தெரிவித்தார். இதில் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் முடிவை அன்றைய தினத்தில் காலை 10.00 மணி தொடங்கி தத்தம் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது கைப்பேசியில் 15888 என்ற எண் வாயிலாகக் குறுந்தகவல் அனுப்பியும் தெரிந்துக்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

1எம்டிபி விவகாரம்; நஜீப் – ரோஸ்மாவிடம் மேலும் விசாரணை

கோலாலம்பூர், செப். 28 1எம்டிபி நிதி முறைகேடல் விவகாரம் தொடர்பில் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மற்றும் அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரிடமும் மேலும் விசாரணை நடத்தப்படும் என்று புக்கிட் அமான் வர்த்தகக் குற்றவியல் இலாகாவின் இயக்குநர் டத்தோஸ்ரீ அமார் சிங் இஷார் சிங் தெரிவிதுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை போலீசார் 70 பேரிடமிருந்து வாக்குமூலத்தைப் பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அம்னோவுக்குச் சொந்தமான 4.33 கோடி வெள்ளியை

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

எஸ்எஸ்டிக்கு பாடலா?

கோலாலம்பூர், செப். 22 எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை சேவை வரி பற்றி ஒரு பாடலை நிதியமைச்சர் லிம் குவாங் எங் உருவாக்க முடியுமா என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கேள்வி எழுப்பியுள்ளார். ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரிதான் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்தற்கு காரணம் என்று லிம் குறை கூறியிருந்தார். சிறு பிள்ளைகளின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் ஜிஎஸ்டி பற்றி ஒரு பாடலையும் லிம்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக வழக்குரைஞர் ஆர்ட் ஹருண் நியமனம்

கோலாலம்பூர், செப். 21 ஆர்ட் ஹருண் என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் மூத்த வழக்குரைஞரான அஸ்ஹார் அஸிஸான் தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்ஹார் அஸிஸானின் நியமனத்துக்குப் பேரரசர் சுல்தான் ஐந்தாம் முகமட் V இணக்கம் தெரிவித்திருப்பதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ இஸ்மாயில் பாக்கார் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவரான டான்ஸ்ரீ முகமட் ஹாஷிம் அப்துல்லா ஜூலை மாதம் முன்கூட்டியே

மேலும் படிக்க