சனிக்கிழமை, அக்டோபர் 20, 2018
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள்
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

கோயிலின் ஐதீகத்தில் யாரும் தலையிடக் கூடாது – ரஜினிகாந்த் !

சென்னை: கோயிலின் ஐதீகத்தில் யாரும் தலையிடக் கூடாது என்று சபரிமலை குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் யாரும் நுழையக் கூடாது என்பது காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபு ஆகும். இந்த மரபை மாற்றும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து தீர்ப்புக்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐப்பசி மாதத்தையொட்டி கோயில் நடைத் திறப்புக்காக வந்த பெண்கள்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் 1 எம்.டி.பி பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் – லிம் கிட் சியாங் !

நீலாய், அக்.20- தேசிய முன்னணியின் உறுப்பு கட்சிகள், தாங்கள் பெற்ற ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என  டி.ஏ.பி கட்சியின் ஆலோசகர் லிம் கிட் சியாங் வலியுறுத்தியுள்ளார். இதன் வழி அரசாங்கம் அந்த பணத்தை மீண்டும் மக்களிடமே ஒப்படைக்க முடியும் என்று அவர் சொன்னார். 2013 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் இருந்து தேர்தல் நிதியைப் பெற்றிருப்பதாக

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

மின் கட்டணத்தை அரசாங்கம் உயர்த்தாது – யோ பி யின் !

கோலாலம்பூர், அக்.20 - நாட்டில், தற்போது மின்சார கட்டணத்தை  உயர்த்த அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை என  எரிபொருள், அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் யோ பி யின் தெரிவித்துள்ளார்.  எனினும் ம்க்கள் சிக்கனத்துடன் மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பமாகும் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டு மக்கள், மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்துவதற்காக, மின்சாரக் கட்டணத்தை உயர்த்துமாறு, மின் உற்பத்தியாளர்கள் பரிந்துரை செய்திருக்கின்றனர் .

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

ஸாஹிட்டின் அனைத்துலக கடப்பிதழ் இன்னும் கருப்புப் பட்டியலிடவில்லை -டத்தோஸ்ரீ முஸ்தாபார் அலி

பாங்கி, அக். 20 அதிகாரத்துவ மையம் கோரிக்கை வைத்தால் மட்டுமே முன்னாள் துணைப் பிரதமரும் அம்னோவின் தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடியின் அனைத்துலகக் கடப்பிதழ் கருப்புப்பட்டியலிடப்படும் என குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தாபார் அலி தெரிவித்தார். எம்ஏசிசி எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையம் அல்லது போலீசாரிடமிருந்து இன்னும் எந்தவொரு கோரிக்கையும் பெறவில்லை என்று யூனிடென் பல்கலைக்கழகத்தில் நடந்த வோல்லிபால் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் போது

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

10 ஆண்டுகளுக்குப் பிறகு மைக்கியில் புதிய தலைமைத்துவம் ; டத்தோ கோபாலகிருஷ்ணன் அணி வென்றது !

கோலாலம்பூர், அக்.20 - மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தில் ( மைக்கி) 10 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமைத்துவ மாற்றம் ஏற்பட்டுள்ளது.  சனிக்கிழமை நடைபெற்ற அச்சம்மேளனத்தின் 2018 முதல் 2021 ஆம் தவணைக்கான தேர்தலில் நடப்பு தலைவர் டான் ஶ்ரீ கென்னத் ஈஸ்வரன் தோல்வி கண்டுள்ளார். கென்னத் ஈஸ்வரனை எதிர்த்து போட்டியிட்ட டத்தோ என். கோபாலகிருஷ்ணன் 111 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதேவேளையில் டான் ஶ்ரீ கென்னத் ஈஸ்வரன்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ பீட்டர் வேலப்பன் காலமானார் !

கோலாலம்பூர், அக்.20 - ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ பீட்டர் வேலப்பன் இன்று காலை காலமானார்.  ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் நடப்பு தலைமைச் செயலாளர் டத்தோ வின்சோர் போல் ஜோன் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த அக்டோபர் முதல் தேதி 83 வயதை எட்டிய டத்தோ பீட்டர் வேலப்பனுக்கு டத்தின் பவளம் என்ற மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். நெகிரி செம்பிலானின் சிலியாவில் பிறந்த பீட்டர்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

பினாங்கு நிலச்சரிவில் நால்வர் பலி; மீட்பு பணிகள் தீவிரம்

ஜோர்ஜ்டவுன், அக் 20 புக்கிட் கூகுஸ், இரட்டை நெடுஞ்சாலை கட்டுமான தளத்தில் நிகழந்த நிலச்சரிவில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று மதியம் நிகழ்ந்த இச்சம்பவத்தில் இதுவரை மண்ணில் புதையுண்ட 4 பேரை மீட்புத் துறையினர் கண்டெடுத்துள்ளதாக பாதுகாப்பு மற்றும் மீட்புப் பிரிவின் நடவடிக்கை கொமண்டர் மோர்னி மாமாட் தெரிவித்தார். இந்தக் கட்டுமானத் தளத்தில் பணியாளர்கள் வேலை செய்துக் கொண்டிருந்தப் போது திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் காணாமல் போன

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

புதிய சாதனையை நோக்கி சர்கார்

கோலாலம்பூர், அக் 19 தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கியுள்ள திரைப்படம் சர்கார். இத்திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியிடப்படுகின்றது. முன்னதாக வெள்ளிக்கிழமை மலேசிய நேரப்படி இரவு 8.30 சர்கார் திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரை சமுக தளங்களில் பகிர்ந்து தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதுவரையில் விஜய்யின் மெர்சல் திரைப்படம்தான் யூடியூப்பில் அதிக லைக் வாங்கிய டீசர். அந்த சாதனையை சர்கார் முறியடிக்குமா என்பது

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

2000 வீடற்றவர்களுக்கு ஹானா அமைப்பு உதவி

கோலாலம்பூர், அக். 19 மலேசிய ஹானா ஆதரவற்றோர் சமூக நல அமைப்பு தீபாவளியை முன்னிட்டு 2,000 வீடற்றவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையானது இம்மாதம் 27ஆம் தேதி 5 மாநிலங்களில் மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை நடைபெறும் என அதன் தலைவர் புவனேஸ்வரன் மோகன் கூறினார். ஜோகூர், பேரா, சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம், பினாங்கு என 5 மாநிலங்களில்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

மஇகாவின் துணைத் தலைவர் யார்? 3 உதவித் தலைவர்களுக்கு 10 பேர் போட்டி !

கோலாலம்பூர், அக். 20- மஇகாவின் உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தல் நாளை சனிக்கிழமை நடக்கின்றது. கட்சியின் தேசிய துணைத் தலைவர் பதவிக்கு நேரடிப் போட்டி நிலவும் வேளையில் 3 உதவித் தலைவர்கள் பதவிக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர். இதனிடையே, 21 மத்திய செயலவை பதவிகளுக்கு 44 பேர் களம் இறங்கியுள்ள வேளையில் முக்கியமாக 10 மாநிலங்களில் செயற்குழு பதவிக்கு போட்டி நிலவுகின்றது. டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தேசியத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடக்கும்

மேலும் படிக்க