புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018
அண்மையச் செய்திகள்
முகப்பு > பொதுத் தேர்தல் 14
அரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

3,407 இந்தியர்களுக்கு குடியுரிமை: மகிழ்ச்சி !! ஆனால் எங்கே அந்த 3 லட்சம் பேர்! – சிவராஜ் கேள்வி!

கோலாலம்பூர், ஆக. 14- நம்பிக்கைக் கூட்டணி அரசு 3,407 இந்தியர்களுக்கு சிவப்பு நிற அடையாள அட்டைக்கு பதிலாக நிரந்தரக் குடியுரிமை வழங்குவது குறித்து தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிவராஜ் சந்திரன் தமது அறிக்கையில் கூறியுள்ளார். இந்நிலையில் 3 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள், அவர்களை அடையாளம் காண்பார்களா என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார். இது குறித்து அவர்

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

பிரதமரின் பதவிக் காலம் நீட்டிக்கப்படலாம்! – துன் மகாதீர்

கோலாலம்பூர், ஆக. 14- பிரதமரின் பதவிக் காலத்தை இரண்டு தவணையாக வரையறுக்கும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படலாம் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கோடி காட்டினார். அரசியலமைப்பு திருத்தங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படுகிறது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். பக்காத்தான் ஹராப்பானுக்கு நாடாளுமன்றத்தில் போதுமான ஆதரவு கிடைக்கும் வரை சட்டத் திருத்தங்கள் ஒத்திவைக்கப்படும் என்றார் அவர். அரசியலமைப்புத்

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

பலாக்கோங் இடைத்தேர்தல் : ஜசெக வேட்பாளர் வோங் சியு கி ! மசீச வேட்பாளர் டான் சீ தியோங்

கோலாலம்பூர், ஆக. 14- பலாக்கோங் இடைத் தேர்தலுக்கான ஜசெகவின் வேட்பாளராக சுபாங் ஜெயா நகராண்மைக்கழக (எம்பிஎஸ்ஜே) உறுப்பினர் வோங் சியு கி-யை அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அதனை அறிவித்தார். கோலாலம்பூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் அவர் அதை அறிவித்தபோது சிலாங்கூர் ஜசெக தலைவர் டோனி புவாவும் உடன் இருந்தார். பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எட்டி இங், ஜூலை 20இல் சாலை

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

நாடாளுமன்றத்திற்கு திரும்பினார் முகைதீன்! எம்.பி.யாக பதவி உறுதிமொழி

கோலாலம்பூர், ஆக. 14- உடல்நலக் குறைவு காரணமாக நீண்ட நாட்கள் விடுப்பில் இருந்த உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் இன்று மக்களவையில் பாகோ தொகுதி எம்.பி.யாகப் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார் இந்த பதவியேற்பு சடங்கு மக்களவைக் கூட்டம் கூடுவதற்கு முன்பாக அதன் சபாநாயகர், டத்தோ முகமட் அரிப் மாட் யூசோப் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக வயிற்றுப் பகுதியில் உள்ள கணையத்தில் மீண்டும் கட்டி வளராமல் இருக்க கடந்த

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

அனைத்து வகையிலும் பொதுமக்களுக்கு சேவையாற்றுவேன்! டத்தோ டாக்டர் பாலசுப்ரமணியம்

கோலாலம்பூர், க. பிகேஆர் கட்சியின் உயர் மட்ட பதவிகளில் ஒன்றான உதவித் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட தமக்கு எல்லா தகுதியும் இருக்கிறது. அதனால் தான் இம்முறை உதவித் தலைவர் போட்டிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பதாக பேராசிரியர் டத்தோ டாக்டர் ஜி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். அண்மையில் கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் பொறுப்புக்கான வேட்புமனுத் தாக்கலைச் செய்த அவர், செய்தியாளர்களை சந்தித்த போது அவ்வாறு கூறினார். மலேசியாவைப் பொறுத்தவரையில் ஏராளமான மாணவர்களை மருத்துவர்களாக

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

அடுத்த வாரத்தில் குடும்பப் பெண்களுக்கு இபிஎப்

கோலாலம்பூர், ஆக.8- தன்னார்வ ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் குடும்பப் பெண்கள் தரமான சமூகப் பாதுகாப்பைப் பெற்று 3 கட்டங்களாக அமல்படுத்தப்படுவதில் தங்களின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் தெரிவித்தார். அடுத்த வாரம் 15ஆம் தேதி தொடங்கவிருக்கும் இத்திட்டத்தில் அதன் உறுப்பினர்கள் அனைவரும் 1 மாதத்தில் குறைந்தபட்சம் 5 வெள்ளியை தங்கள் இபிஎப் கணக்கில் செலுத்தலாம். அரசு மாதத்திற்கு 40

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

அன்வாருக்கு பத்து தொகுதியை விட்டுத் தர பிரபாகரனுக்கு 2.5 கோடி?

கோலாலம்பூர், ஆக.7- பத்து நாடாளுமன்றத் தொகுதியை பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு விட்டுக் கொடுக்க வெ.2.5 கோடி லஞ்சம் தமக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதை பத்து தொகுதி எம்.பி, பி.பிரபாகரன் (வயது 22) மறுத்தார். அந்த செய்தியில் துளி அளவும் உண்மையில்லை. உண்மைக்கு புறம்பான விஷயத்திற்கு எப்படி கருத்துரைக்க முடியும் என்று நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பிரபாகரன் குறிப்பிட்டார். இது உண்மையில் வதந்தியின் அடிப்படையில்தான் மேற்கொள்ளப்பட்டது என்பதை

மேலும் படிக்க
அரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

அன்வார் குடும்பத்தில் 3 எம்பிகளா? பிரச்னை எழுமா?

பெட்டாலிங் ஜெயா, ஆக. 7- பிகேஆர் தலைவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் குடும்பத்திலிருந்து 3 பேர் ஒரே நேரத்தில் எம்.பிக்களாவதால் எந்தவொரு பிரச்னையுமில்லை என்று அரசியல் ஆய்வாளர் கமாருல் ஸாமான் யூசோப் தெரிவித்தார். இதற்கு முக்கியக் காரணம் அன்வாருக்கு வழிவிட அவரது துணைவியார், டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் மற்றும் மகள், நூருல் இசா அன்வார் தங்களின் எம்.பி பதவிகளை விட்டு தயாராக இல்லை. இது அதிர்ச்சியை

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

அன்வாருக்காக செலாயாங் தொகுதியை விட்டுக் கொடுக்கத் தயார்! – வில்லியம் லியோங்

கோலாலம்பூர், ஆக. 8- செலாயாங் நாடாளுமன்ற தொகுதியை பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு விட்டுத் தர தாம் தயாராக இருப்பதாக அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் தெரிவித்துள்ளார். அன்வாரின் துணைவியார் டத்தோஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் மற்றும் அவரது மகள் நூருல் இஸ்ஸா அன்வார் தங்களுடைய, முறையே பாண்டான் மற்றும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதிகளை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என நேற்று கூறியிருந்தார்கள்.

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

அன்வாருக்காக பதவிகளை விட்டுக் கொடுக்க மாட்டேன்! – டாக்டர் வான் அஜிஸா

கோலாலம்பூர், ஆக.6- தம் கணவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிகேஆர் தலைவராக வெற்றி பெற்றாலும் துணைப் பிரதமர் பதவியைத் தாம் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். பண்டான் தொகுதி எம்.பி பதவியையும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபெற்ற பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் வான் அஜிஸா குறிப்பிட்டார். முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிகேஆர் கட்சித் தலைவர்

மேலும் படிக்க