திங்கட்கிழமை, அக்டோபர் 22, 2018
அண்மையச் செய்திகள்
முகப்பு > சிறப்புச் செய்திகள்
கலை உலகம்சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

50 தமிழ் அலைவரிசைகளை அறிமுகப்படுத்துகிறது கூஃபிலிக்ஸ்!

கோலாலம்பூர், அக். 16- மலேசிய கலை சார்ந்த ரசிகர்களுக்காக 50 தமிழ் தொலைக்காட்சி, செய்தி, இசை நிகழ்ச்சி, வானொலி என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை வழங்குகின்றது கூஃபிலிக்ஸ். மலேசியாவில் உள்ள தமிழர்களும் முழுமையாக பொழுது போக்கு அம்சங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் கூஃபிலிக்ஸ் தொலைபேசி ஆப்ஸ், இணையத்தள ஒருங்கிணைப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழங்கப்படுவதாக அதன் இயக்குநர் டத்தோ கார்த்திக் கூறினார். கூஃபிலிக்ஸ் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை ஒரே தளத்தில் தருகிறது.

மேலும் படிக்க
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு விசா கட்டணம் வேண்டும்!

கோலாலம்பூர், அக். 16- சபரி மலைக்குச் செல்லும் மலேசிய பக்தர்களுக்கு சிறப்பு விசா கட்டணம் விதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்நிறுத்தி மலேசியாவிற்கான இந்திய தூதரகத்தில் அதற்கான மகஜர் ஒன்றை மலேசிய ஐயப்ப சேவை சங்கம் வழங்கியுள்ளதாக அதன் தலைவர் யுவராஜா கூறினார். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் சபரி மலைக்கு உலக நாடுகளிலிருந்து அதிகமான பக்தர்கள் பயணமாகின்றார்கள். கேரளாவிற்கு அடுத்து மலேசியாவிலிருந்து தான் அதிகமான ஐயப்ப பக்தர்கள்

மேலும் படிக்க
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வெள்ளம் தீபாவளி விற்பனையை பாதித்து விடும் இந்தியா வர்த்தகர்கள் அச்சம்

கிள்ளான், அக்.15- நகரத்தில் ஏற்படும் திடீர் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காண அமலாக்கத் தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று லிட்டல் இந்தியா தொழில்முனைவர்கள் சங்கத் தலைவர், என்.பி.இராமன் வலியுறுத்தினார். இதில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்டதில் தங்களின் தீபாவளிக்கான விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்று வணிகர்கள் அச்சம் கொண்டுள்ளனர். இங்கு வெள்ள நீர் மட்டம் கால் முட்டி அளவு வரை இருப்பதோடு சில

மேலும் படிக்க
அரசியல்சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கமல்ஹாசனுடன் குலசேகரன் சந்திப்பு!

சென்னை, அக். 11- மனிதவள அமைச்சர் குலசேகரன் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார். முன்னதாக அவர் தமிழக தொழிலாளர்கள் பிரச்னை, விசா கட்டண உயர்வு குறித்து புதுடில்லியில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் சந்திப்பு நடத்தினார். இந்தியா செல்லும் மலேசியர்களுக்கான சுற்றுலா விசா கட்டணம் சில மாதங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்டது. முகப்பிட சேவை வழி பெறப்படும் விசா கட்டணம் 462 வெள்ளி 52 காசாக உயர்த்தப்பட்டது. சேவைக் கட்டணம்

மேலும் படிக்க
அரசியல்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சாலை வரியை புதுப்பிக்க வெ.5 கூடுதல் கட்டணம்?

கோலாலம்பூர், அக்.11- சாலை வரியை புதுப்பிக்கவும் மோட்டார் வாகன லைசென்சுகளை புதுப்பிக்கவும் 5 வெள்ளி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை போஸ் மலேசியா நேற்று உறுதிசெய்தது. எனினும் வர்த்தக துறை சார்ந்த வாடிக்கையாளர்களுக்கே இந்த கூடுதல் கட்டணம் அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி விதிக்கப்படும். வங்கி பிரதிநிதிகள், நிதி நிறுவனங்கள், காப்புறுதி நிறுவனங்கள், புதிய அல்லது பழைய கார் விற்பனை நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கே இந்த கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். எனினும்

மேலும் படிக்க
குற்றவியல்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சிறையில் 3,270 பெண் கைதிகள்! இன்ஸ்பெக்டர் புனிதா சண்முகம்

காஜாங், அக். 8- நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கடந்த ஜூன் மாதம் வரை இருந்த 3,270 பெண் கைதிகள் சிறை வாழ்க்கையில் தங்களை தயார்படுத்திக் கொள்ள கடுமையாகப் போராடியதாக சிறைச்சாலைத் துறை அதிகாரி, இன்ஸ்பெக்டர் புனிதா சண்முகம் தெரிவித்தார். இதில் குறிப்பாக இங்குள்ள தாய்மார்களுக்கு பெரும் சவாலாக இருந்தது என்றுதான் கூற வேண்டும். சிறைச்சாலையில் நீதிமன்ற மேல் முறையீடு, குடும்ப விவகாரங்கள் ஆகியவற்றுடன் கைதிகளை கவனித்துக் கொள்வது அவர்களிடமிருந்து

மேலும் படிக்க
அரசியல்சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மஇகா இளைஞர் பகுதித் தேர்தல் : நேருஜிக்கு ஆதரவு பெருகுகின்றது!

கோலாலம்பூர், செப். 29- மஇகா இளைஞர் பிரிவின் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்று மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் மற்றும் 2 மத்திய செயலவை பதவிகளுக்குமான தேர்தல் நடைபெறுகின்றது. மஇகா இளைஞர் பிரிவின் தலைவராக தினாளன் ராஜகோபால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில், துணைத் தலைவர் பதவிக்கு ஜோகூர் மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் சுப்ரமணியம் போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து சிலாங்கூர் மாநில இளைஞர் பகுதித் தலைவர் கஜேந்திரன் போட்டியிடுவார்

மேலும் படிக்க
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

லெவி கட்டணம் 10 ஆயிரம் வெள்ளியா? பழைய கட்டணத்தை நிலை நிறுத்துவீர்!

கோலாலம்பூர், செப். 27- 10 ஆண்டுகளுக்கு மேலான இந்நாட்டில் அந்நிய தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த ஆண்டிற்கு ஒரு ஆளுக்கு 10,000 வெள்ளி லெவி கட்டணத்தை முதலாளிமார்கள் செலுத்த வேண்டும் என அரசு கூறியுள்ளதை மீண்டும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என மலேசிய இந்திய வர்த்தக சங்கங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மலேசிய இந்திய உணவக

மேலும் படிக்க
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பெர்னாமா தமிழ்ச் செய்தி – இரவு 11.30க்கு மறு ஒளிபரப்பு

கோலாலம்பூர், செப். 21- பெர்னாமா அலைவரிசை 502 இல் தினமும் இரவு 7 மணிக்கு ஒளியேறிவரும் தமிழ்ச் செய்திகள் மக்களிடையே பெரும் ஆதரவை பெற்று வருகிறது. இதன் மறு ஒளிபரப்பு, நள்ளிரவு 12.30-க்கு ஒளியேறி வந்தது. மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அதன் மறு ஒளிபரப்பு நள்ளிரவு 12.30 மணியிலிருந்து இரவு 11.30-க்கு மாற்றப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதி, திங்கட்கிழமை முதல் இம்மறு ஒளிபரப்பு இரவு 11.30-க்கு ஒளியேறி வருவதாக

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஆரோக்கிய சுவாச பிரசாரம்! லிம் கோக் விங் கார்டியன் கூட்டு முயற்சி

சைபர்ஜெயா, செப். 21- ஆரோக்கிய சுவாசத்தின் மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் மலேசியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான லிம் கோக் விங், கார்டியன் மலேசியாவுடன் இணைந்து ஆரோக்கிய சுவாசம் குறித்த பிரசாரத்தை தொடங்கியுள்ளது. சைபர்ஜெயாவில் உள்ள லிம் கோக் விங் பல்கலைக்கழகத்தில் இதனை இளைஞர், விளையாட்டுத் துறை துணையமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். லிம் கோக் விங் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துத்

மேலும் படிக்க