வியாழக்கிழமை, ஏப்ரல் 2, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம்
உலகம்முதன்மைச் செய்திகள்

அடங்கிப் போயிருக்கும் மிக நெரிசலான பாலம்

ஆதவன் ஜொகூர் பாரு, மார்ச் 18- உலகிலேயே மிக நெரிசலான தரைவழிப் பாதை (பாலம்) என அழைக்கப்பட்டு வந்த ஜொகூர் பாலம் இன்று அதிகாலை முதல் எந்தவொரு பயணியும் பயன்படுத்தாமல் மிக அமைதியாய் இருக்கின்றது. மார்ச்சு 31 வரை நடைமுறையில் இருக்கும் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை பிறப்பிக்கப்பட்ட்து முதல் இந்த மலேசிய சிங்கை எல்லைப் பாதை மூடப்பட்டிருக்கிறது. அதிகாலை 4.00 மணி தொடங்கி காலை 9.00 மணி வரை

மேலும் படிக்க
உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

தாய் மொழியை உயிர்போல் நேசிப்போம்! உலகத் தாய்மொழி நாள்

உலக மக்கள் அவரவர் தாய்மொழியை நேசிக்க வேண்டும். காலமாற்றத்தால் தாய்மொழியை மறந்துவிடக்கூடாது அதன் உரிமையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் பிப்ரவரி 21ம் தேதி உலகத் தாய்மொழி நாளாக அனுசரிக்கப்படுகிறது. 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் நாளில், அன்றைய கிழக்குப் பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர் நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் கொண்டாட்டப்பட்டு

மேலும் படிக்க
உலகம்முதன்மைச் செய்திகள்

கோவிட் 19 தாக்கம் : முதன்மை மருத்துவர் மரணம்!

பெய்ஜிங் பிப். 18- சீனாவின் மத்திய நகரமான வுஹானில் உள்ள ஒரு முன்னணி மருத்துவமனையின் உயர்மட்ட தலைவர் கோவிட் 19 வைரஸ் (கொரோனா) வெடிப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். முன்னணி மருத்துவமனையின் முதன்மை மருத்துவருக்கே இந்த நோயின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் பாமர மக்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி உலக மக்களை அச்சுறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளது. அந்த முன்னணி மருத்துவமனையின் உயர்மட்ட தலைவர் லீவ் ஜிமிங் காலை 10.30க்கு

மேலும் படிக்க
உலகம்முதன்மைச் செய்திகள்

மேலும் இரண்டு மலேசியர்களுக்கு கோவிட் 19 வைரஸ் தாக்கம்

யோகொஹம, பிப். 18- ஜப்பானில் உள்ள யோகொஹம துறைமுகத்தில் நங்கூரமிட்டுத் தனிமைப்படுத்தப்பட்ட டைமன் பிரின்சஸ் கப்பலில் இரண்டு மலேசியர்களுக்குக் கோவிட் 19 வைரஸ் (கொரோனா) தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த இருவரின் சோதனை முடிவுக்காக மலேசியா காத்திருப்பதாகச் சுகாதார இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தமது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். சீனாவுக்கு அடுத்தபடியாக இந்த வைரஸ் தாக்குதலுக்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது தனிமைப்படுத்தப்பட்ட இந்த டைமன்

மேலும் படிக்க
உலகம்முதன்மைச் செய்திகள்

F1 பந்தையம்: ஃபெராரியின் புதிய கார் அறிமுகம்

இவ்வாண்டு F1 கார் பந்தைய போட்டியில் பங்கேற்க ஃபெராரி குழு தனது புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தாலியில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்தப் புதிய காருக்கு SF1000 என பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை கார் பந்தையங்களில் ஃபெராரி 999 வெற்றிகளை பதிவு செய்திருக்கிறது. அடுத்த வெற்றி 1000 என்ற கணக்கை மையமாக வைத்து இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு கிமி ரேய்க்கோனன் மூலம் ஃபெராரி சாம்பியன் பட்டத்தை வென்றது. 2008ஆம்

மேலும் படிக்க
அரசியல்உலகம்முதன்மைச் செய்திகள்

பதவி விலகு! ட்ரம்பை குறிவைக்கும் மகாதீர்!

சைபர்ஜெயா, பிப். 10- மத்திய கிழக்கு சமாதான திட்டத்தின் காரணமாக அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து டொனால்ட் ட்ரம்ப் விலகவேண்டும் என மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ''அமெரிக்கர்களுக்கு எதிராக நான் பேசவில்லை அதிபர் ட்ரம்ப் பற்றி மட்டுமே பேசியுள்ளேன்'' என மகாதீர் குறிப்பிட்டார். அதோடு ''அமெரிக்கர்கள் மிகவும் நல்லவர்கள், ஆனால் அதிபர் டிரம்ப் அவர்களைப் போன்றவர் அல்ல என்பதை நான் காண்கிறேன்.'' ''இந்நிலையில் அமெரிக்காவை காப்பாற்றுவதற்காகவே

மேலும் படிக்க
அரசியல்உலகம்முதன்மைச் செய்திகள்

3ஆவது ஆசியான் பல்லுயிர் மாநாடு : உலகளாவிய நிலையில் 500 பேராளர்கள்! – டாக்டர் ஜேவியர் ஜெயக்குமார்

புத்ராஜெயா, ஜன. 21- 3ஆவது ஆசியான் பல்லுயிர் மாநாட்டின் (ஏசிபி 2020) முன்னோட்ட தொடக்க விழா இன்று விமர்சையாக நடந்தது. நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இதனை முன்னின்று வழி நடத்திய வேளையில் இந்நிகழ்ச்சியில் ஆசியான் பல்லுயிர் மையத்தின் நிர்வாக இயக்குனர் தெரேஷா முண்டிதா எஸ். லிம், உட்படத் தாய்லாந்து பிலிப்பைன்ஸ் கொரியா தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட மலேசியாவிற்கான வெளிநாட்டு தூதர்களும் பங்கேற்றனர். ''2050 இயற்கையுடன்

மேலும் படிக்க
உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

மியன்மார் யங்கூனில் 4ஆவது எழுமீன் (ரைஸ்) மாநாடு!

யங்கூன், டிச 20- உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் மூன்றாம் உலகத் தமிழ் தொழிலதிபர்கள், திறனாளர்கள் மாநாடு (எழுமின்) சென்னையில் நவம்பர் 14ஆம் தேதி மிக விமர்சையாக நடந்தது. 35 நாடுகளிலிருந்து 1000க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்ட இந்த மூன்று நாள் மாநாட்டில் மலேசியாவிலிருந்து 60க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தகப் பரிமாற்றங்கள், வர்த்தக மேம்பாடு, தமிழர்களின் பொருளாதார வளர்ச்சி குறித்த பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும்

மேலும் படிக்க
உலகம்முதன்மைச் செய்திகள்

ஆப்பிரிக்காவில் படகு கவிழ்ந்து 58 அகதிகள் பலி

நவாக்சோட்: உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார பிரச்சினைகளால் சீர்குலைந்துள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இப்படி செல்கிறவர்களில் பெரும்பாலானோர் கடல் மார்க்கமாக சட்டவிரோத பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளை அடைகின்றனர். பாதுகாப்பற்ற மற்றும் அபாயகரமான முறையில் மேற்கொள்ளப்படும் படகு பயணங்கள் பெரும்பாலும் பெரிய விபத்தில் முடிந்து விடுகிறது. இந்த நிலையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருந்து கடந்த மாத இறுதியில்

மேலும் படிக்க
உலகம்முதன்மைச் செய்திகள்

கோலாலம்பூரை ஒரு முக்கிய மலிவுக் கட்டணத் தளமாக உருவாக்குவதில் ஏர் ஏசியாவிற்கு அங்கீகாரம்!

சிப்பாங், செப் 26 - கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KUL) சர்வதேச அளவில் உலகின் மிக அதிகமான இணைப்பைக் கொண்டுள்ள மலிவுக் கட்டண முனையமாக அறிவித்துள்ள 2019 OAG மெகாஹப்ஸ் குறியீட்டை ஏர் ஏசியா வரவேற்கிறது. மணிலா (MNL), சிங்கப்பூர் (SIN), இஞ்சியோன் (ICN) மற்றும் சான் டியேகோ (SAN) ஆகியவற்றை காட்டிலும் கோலாலம்பூர் முன்னிலை வகிப்பதோடு மலிவுக் கட்டணப் பிரிவில் காணப்படும் எஞ்சிய முதல் 25 முனையங்களைக்

மேலும் படிக்க