புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம்
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

தொடர் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் கேரளா

திருவனந்தபுரம், ஆக 10 கேரளாவில் பெய்துவரும் தொடர் மழையால் அங்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்த வெள்ளத்தால் 26 பேர் வரை பலியாகி உள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த கனமழையால் கேரளாவே மொத்தமாக மூழ்கி உள்ளது, இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்கு தீவிரமாக மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

அண்ணாவுடன் இணைந்தார் தம்பி; கலைஞர் நீங்கா துயில்

சென்னை, ஆக. 8 மறைந்த திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியின் உடல் 27 குண்டுகள் முழுங்க மெரினாவில் பேரறிஞர் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக சென்னை, ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உடலுக்கு பிரதமர் மோடி, கவர்னர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட லட்சக்கணக்கான தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர். கலைஞர் உடல் மீது தேசிய

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

மெரினாவை நோக்கி கலைஞர்; இறுதி ஊர்வலத்தில் மக்கள் வெள்ளம்

சென்னை, ஆக 8 திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். அவரது ராஜாஜி அரங்கில் குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதிகாலை முதல் லட்சக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் அவருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி கருணாநிதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இந்நிலையில்,

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

தயவு செய்து கலைந்து செல்லுங்கள்; தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை, ஆக 8 ராஜாஜி அரங்கத்தை விட்டு தொண்டர்கள் கலைந்து சென்றால்தான் கருணாநிதியின் ஊர்வலம் அமைதியாக நடைபெறும். தயவு செய்து கலந்து செல்லுங்கள் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார். கருணாநிதியின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு கருணாநிதியின் இறுதி ஊர்வலம் புறப்படுவதாக திமுக அறிவித்துள்ளது. தொண்டர்கள் தடுப்புகளை தாண்டி கருணாநிதியின் உடல் அருகே செல்வதால் அங்கு

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும்! நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக. 8- திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு மெரீனா கடற்கரையில் இடம் தர முடியாது என்று தமிழக அரசு கூறியிருந்தது! இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பதில் மனுவில் கடற்கரைக்குப் பதில் காந்தி மண்டப வளாகத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், நீதிபதி சுந்தர் அமர்வின் முன்பு தமிழக அரசின்பதில் மனு

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி : கண்ணீர் கடலானது ராஜாஜி அரங்கம்

சென்னை, ஆக. 8- திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் உடலுக்கு மக்களும் தொண்டர்களும் பிரியா விடை கொடுத்து வருவதால் ராஜாஜி அரங்கமே கண்ணீர் கடலாக மாறியது. கருணாநிதி கடந்த 11 நாட்களாக அவர் உடல்நிலை பாதிப்பால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவரது உடல்நிலையில் ஏற்றமும் இறக்கமும் அவ்வப்போது வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து மருத்துவமனை முன்பு ஏராளமானோர் கூடினர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

மெரினாவில் கலைஞருக்கு இடம் கொடுங்கள்; தொண்டர்கள் போராட்டம்

சென்னை, ஆக 8 காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததை தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்களும் சினிமா பிரபலங்களும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கருணாநிதியின் உடல் இறுதி அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், மெரினாவில்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

உதய சூரியன் மறைந்தது; கலைஞர் காலமானார்

சென்னை, ஆக 7 உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி காலமானார். நேற்றிரவு கலைஞரின் உடல் மேசமடைந்ததால் இன்று மதியம் வரை அவரது உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வந்தனர். இந்நிலையில் சற்று முன்பு காவிரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் மலேசிய நேரப்படி இரவு 8.40க்கு கருணாநிதி இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. நேரம் ஆக ஆக அவரது

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

கலைஞர் உடல்நிலை கவலைக்கிடம்; எது வேண்டுமானாலும் நடக்கலாம்

சென்னை, ஆக 7 திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் அவரது உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாக தமிழ்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. மேலும் கருணாநிதியின் முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் 24 மணி நேரம் கழித்தே அவரது உடல்நிலை குறித்து சொல்ல முடியும் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை 26ஆம் தேதி கருணாநிதிக்கு திடீரென காய்ச்சல்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

உடல்நலம் தேறி நாற்காலியில் அமர்ந்தார் கலைஞர்

சென்னை, ஆக 2 தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து நேற்று அவர் நாற்காலியில் அமர்ந்தார். கடந்த 27-ஆம் தேதி அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சைக்குப்பின் உடல் நிலை தேறி வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதி உடல் நிலை பற்றி விசாரித்து வருகிறார்கள். அவரது உடல் நிலைப் பற்றி கவலை

மேலும் படிக்க