திங்கட்கிழமை, அக்டோபர் 22, 2018
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம்
சமூகம்முதன்மைச் செய்திகள்

2000 வீடற்றவர்களுக்கு ஹானா அமைப்பு உதவி

கோலாலம்பூர், அக். 19 மலேசிய ஹானா ஆதரவற்றோர் சமூக நல அமைப்பு தீபாவளியை முன்னிட்டு 2,000 வீடற்றவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையானது இம்மாதம் 27ஆம் தேதி 5 மாநிலங்களில் மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை நடைபெறும் என அதன் தலைவர் புவனேஸ்வரன் மோகன் கூறினார். ஜோகூர், பேரா, சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம், பினாங்கு என 5 மாநிலங்களில்

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

பொய் புகார் வழக்கை நிறுத்தியது ஏன்? மலேசிய இந்து சங்கம் கேள்வி

பெட்டாலிங்ஜெயா, அக். 18- தமது முதலாளியின் 5 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மதுரைவீரன் கிருஷ்ணன் என்பவர் மீது சம்பந்தப்பட்ட முதலாளியின் மனைவி பொய்ப்புகார் அளித்தார். இதனால் மதுரைவீரன் மனஉளைச்சலுக்கு ஆளாகி பின்னர் குற்றமற்றவர் என போலீசாரால் கண்டறியப்பட்டார் என மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ மோகன் ஷாண் கூறினார். இந்த விவகாரம் தொடர்பில் பொய்ப் புகார் அளித்த அந்த மாதின் மீது வழக்கு விசாரணையில் இருந்தபோது

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

நீதிமன்ற ஆணையின்படி மலேசிய இந்து சங்கத்தின் தேர்தல் நடைபெறும் டத்தோ மோகன்ஷாண்

கோலாலம்பூர், அக். 18- கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய ஆணையின்படி மலேசிய இந்து சங்கத்தின் மத்திய செயலவைக்கான தேர்தல் 3 மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என அதன் தலைவர் டத்தோ மோகன்ஷாண் குறிப்பிட்டார். முன்னதாக சனிக்கிழமை கூடும் மலேசிய இந்து சங்கத்தின் உச்சமன்றக் கூட்டத்தில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்ற முடிவு எடுக்கப்படும் என அவர் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார். முன்னதாக மலேசிய இந்து சங்கம் நடத்திய வேட்புமனுத்தாக்கல் செல்லாது என்பதோடு தேர்தலையும்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

சீபில்டு மாரியம்மன் ஆலயம் உடைக்கப்படலாம் ! அனைவரும் ஒன்றிணைவோம் – டி மோகன் அழைப்பு

ஷா ஆலாம், அக். 16- ஷா ஆலாம் பழைய சீபில்டு தோட்ட மகா மாரியம்மன் ஆலயத்தை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த அவ்வாலயத்தை தகர்க்கும் பணி புதன்கிழமை காலை நிச்சயம் நடக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆலயத்தை காக்க பொதுமக்களால் மட்டுமே முடியும் என மஇகா உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் குறிப்பிட்டுள்ளார். கட்சிப் பேதங்கள், கொள்கைகளை புறந்தள்ளிவிட்டு 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தை தற்காக்க இந்துக்கள் என்ற அடிப்படையில் நாம்

மேலும் படிக்க
கலை உலகம்சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

50 தமிழ் அலைவரிசைகளை அறிமுகப்படுத்துகிறது கூஃபிலிக்ஸ்!

கோலாலம்பூர், அக். 16- மலேசிய கலை சார்ந்த ரசிகர்களுக்காக 50 தமிழ் தொலைக்காட்சி, செய்தி, இசை நிகழ்ச்சி, வானொலி என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை வழங்குகின்றது கூஃபிலிக்ஸ். மலேசியாவில் உள்ள தமிழர்களும் முழுமையாக பொழுது போக்கு அம்சங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் கூஃபிலிக்ஸ் தொலைபேசி ஆப்ஸ், இணையத்தள ஒருங்கிணைப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழங்கப்படுவதாக அதன் இயக்குநர் டத்தோ கார்த்திக் கூறினார். கூஃபிலிக்ஸ் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை ஒரே தளத்தில் தருகிறது.

மேலும் படிக்க
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு விசா கட்டணம் வேண்டும்!

கோலாலம்பூர், அக். 16- சபரி மலைக்குச் செல்லும் மலேசிய பக்தர்களுக்கு சிறப்பு விசா கட்டணம் விதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்நிறுத்தி மலேசியாவிற்கான இந்திய தூதரகத்தில் அதற்கான மகஜர் ஒன்றை மலேசிய ஐயப்ப சேவை சங்கம் வழங்கியுள்ளதாக அதன் தலைவர் யுவராஜா கூறினார். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் சபரி மலைக்கு உலக நாடுகளிலிருந்து அதிகமான பக்தர்கள் பயணமாகின்றார்கள். கேரளாவிற்கு அடுத்து மலேசியாவிலிருந்து தான் அதிகமான ஐயப்ப பக்தர்கள்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

சீஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலய சிக்கல்; பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் -வேதமூர்த்தி வேண்டுகோள்

புத்ராஜெயா, அக்.16- கசகஸ்தான் பயணம் நிறைவு பெற்று நேற்று தாயகம் திரும்பியபோது, சுபாங் ஜெயா, சீ ஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலயம் உடைபடப் போவதாக தகவல் பரவியதன் தொடர்பில் இந்திய சமுதாயத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அன்றைய தோட்டச் சூழல் மாறி, ஆலயம் அமைந்துள்ள இடமும் தற்பொழுது சிக்கலுக்கு ஆளாகியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட ஆலயத்தை ஆகம முறைப்படி வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் நிதி உதவிக்கும்

மேலும் படிக்க
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வெள்ளம் தீபாவளி விற்பனையை பாதித்து விடும் இந்தியா வர்த்தகர்கள் அச்சம்

கிள்ளான், அக்.15- நகரத்தில் ஏற்படும் திடீர் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காண அமலாக்கத் தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று லிட்டல் இந்தியா தொழில்முனைவர்கள் சங்கத் தலைவர், என்.பி.இராமன் வலியுறுத்தினார். இதில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்டதில் தங்களின் தீபாவளிக்கான விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்று வணிகர்கள் அச்சம் கொண்டுள்ளனர். இங்கு வெள்ள நீர் மட்டம் கால் முட்டி அளவு வரை இருப்பதோடு சில

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

சீபில்ட் தோட்ட மகா மாரியம்மன் கோவில் தற்காக்க அனைவரும் இணைய வேண்டும்!

ஷா ஆலம் அக் 15 - ஷா ஆலம் பழைய சீபில்ட் தோட்ட மகா மாரியம்மன் கோவில் அங்கிருந்து முற்றாக அகற்றப்பட வேண்டும் என ஷா ஆலம் உயர் நீதிமன்றம் கடந்த 28.-9.-2018 ஆணை பிறப்பித்துள்ளது. இன்றுடன் ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டுமென்ற கெடு முடிவடைந்தது. இதனால் ஆலயத்தை பாதுக்காக்க பொது மக்கள் திரண்டு வரவேண்டும் என ஆலய பாதுகாப்பு குழுவினர் கேட்டுக்கொண்டனர். வந்திருந்த பொது மக்கள் ஆலயம் காக்க

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

சரும பாதுகாப்பிற்கு இந்தியர்கள் முக்கியத்துவம் வழங்க வேண்டும் -டாக்டர் விஷ்ணு வலியுறுத்து

கோத்தா கெமுந்திங், அக். 14 மலேசிய இந்தியர்களிடையே சுகாதாரம் குறித்த பாதுகாப்பு மேலோங்கியுள்ள நிலையில் சரும பாதுகாப்பில் அவர்களுக்கான அக்கறை இன்னமும் மேம்படவில்லை என டாக்டர் விஷ்ணு தெரிவித்தார். சரும பாதுகாப்பு என்பது பெண்கள் சார்ந்த ஒன்று என்ற தவறான கண்ணோட்டம் மலேசிய இந்தியர்களின் மத்தியில் நிலவுகின்றது. ஆனால், இது ஆண் என இரு பாலருக்கும் அத்தியாவசியமான ஒன்று என அவர் நினைவுறுத்தினார். சுகாதார பாதுகாப்பு என்பது மனிதனின் அத்தியாவசிய

மேலும் படிக்க