வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2017 > ஜூலை
முதன்மைச் செய்திகள்

360 தமிழ்ப்பள்ளிகளில் குறைந்த மாணவர்கள்

கோலாலம்பூர், ஜூலை 31- நாடு முழுவதிலும் 360 தமிழ்ப்பள்ளிகளில் சராசரியாக ஒவ்வொரு பள்ளியிலும் 150க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் சுமார் 176 பள்ளிக்கூடங்களில் சராசரியாக ஒரு பள்ளியில் 20 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் அப்பள்ளிகள் மூடப்படலாம் அல்லது இணைக்கப்படலாம் என கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் தெரிவித்தார். ஒரு பள்ளியில் 150க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

மகாதீரின் அடையாள அட்டை விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தீர்மானம்

கோலாலம்பூர், ஜூலை 31- முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் அடையாள அட்டையை வெளியிட்டது குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் அவசர தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டாக்டர் மகாதீரின் அடையாள அட்டையில் உள்ள தகவல்களை பொதுமக்களிடம் வெளியிட்டதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை கூலாய் ஜசெகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் மக்களவை நபாநாயகரிடம் தாக்கல் செய்தார். உள்துறை

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்

விரும்பக்கூடிய, வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களா நமக்கு வேண்டும்?

14ஆவது பொதுத் தேர்தலை அறிவிக்கும் காலம் கனிந்து விட்டதாக நடந்துவரும் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. அது எப்போது நடக்கும் என்று அறிவிக்காத நிலையில், அது சம்பந்தமான செய்திகள் ஊடகங்களில் வந்த வண்ணமாகவே இருக்கின்றன. அண்மையில் ஜோகூர் அம்னோ கூட்டம் ஒன்றில் பேசிய துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி, 14ஆவது பொதுத் தேர்தலுக்குத் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட விரும்பக் கூடியவர்களையும் தேர்தலில் வெற்றி பெறக்கூடியவர்களை மட்டுமே நிறுத்தும்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

ஐநாவில் மலேசியாவிற்கு பெருமை சேர்த்த மலேசிய மாணவி பிரவீனா

கோலாலம்பூர், ஜூலை 31- ஐநாவின் 2017ஆம் ஆண்டு அனைத்துலக மாதிரி மாநாட்டில் மலேசிய மாணவியான பிரவீனா ராமகிருஷ்ணன் சாதனை புரிந்து மலேசியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இது குறித்து கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் முகநூலில் வெளியிட்டுள்ள செய்தியில் சுல்தான் பாட்லிஷா இடைநிலைப் பள்ளியின் மாணவியான பிரவீனா ராமகிருஷ்ணன் வெள்ளிக்கிழமையன்று மலேசியாவைப் பிரதிநிதித்து உலகளவில் 96 நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் மத்தியில் சிறந்த பேச்சாளராகவும் சிறந்த ஆய்வினைச் சமர்பித்ததற்காகவும் விருது வழங்கி

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

எண்ணெய் விலையை நிர்ணயிப்பதில் புதிய முறையா?

கோலாலம்பூர், ஜூலை 31- தற்போது ஒவ்வொரு வாரமும் அமல்படுத்தப்பட்டுவரும் எண்ணெய் விலை நிர்ணய முறையில் மாற்றத்தை கொண்டுவர ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஸைனுடின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் நிதியமைச்சு, எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்களுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருவதாக சாரிக்கே ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் வோங் லிங் பியூ வினவிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

பாலியல் குற்றவியல் நீதிமன்றத்தில் 62 சிறார் வழக்குகள் பதிவு

கோலாலம்பூர், ஜூலை 31- புத்ரா ஜெயா சிறார் பாலியல் குற்றவியல் நீதிமன்றத்தில் 62 சிறார் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சிறார் நீதிமன்றத்தில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை குறித்து பாரிட் சூலோங் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் நோராய்னி அகமட் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். இம்மாதம் 4ஆம் தேதி அந்த நீதிமன்றம் தொடக்கப்பட்டதிலிருந்து இந்தப் புகார்கள்

மேலும் படிக்க
உலகம்

அமெரிக்க தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்ட ரஷ்ய அதிபர்

ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் 755 பேர் உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். இதை கருத்தில் கொண்டு அமெரிக்க ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதிபர் டிரம்பின் கையெழுத்திற்காக அனுபப்பட்டுள்ளது. இதனால் ரஷ்ய அமெரிக்கா மீது கோபத்தில் உள்ளது. இந்நிலையில் ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் புதின் அமெரிக்காவுடன் உடனே உறவு மேம்பட

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

ஜெயலலிதா ஒரு சர்வாதிகாரி: ஸ்டாலின் ஆவேசம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரி என கூறியுள்ளார். ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலம் பகுதி மக்கள் தொடர்ந்து நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். ஆனால் அதற்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. திமுகவும், அதிமுகவும் இந்த விவகாரத்தில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர். பல்வேறு கட்சி தலைவர்களும் கதிராமங்கலம் கிராமத்துக்கு விசிட் அடித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கதிராமங்கலம் சென்று அங்கு

மேலும் படிக்க
சமூகம்

பார்வை குறைபாடுடையோருக்கு  இலவச  கண் கண்ணாடிகள்! 

கோம்பாக், ஜூலை 31-  கோம்பாக் தொகுதியின் ஆதரவில் தாமான் சமுத்திரா கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கண் கண்ணாடி வழங்கும் நிகழ்வில் 100 க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் கண்ணாடிகளை மஇகாவின் உதவித்தலைவரும், மிஃபாவின் தலைவருமான டத்தோ டி.மோகன் வழங்கி சிறப்பித்தார். கோம்பாக் தொகுதியை சார்ந்த கண் குறைபாடு உடையவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்க முனைப்பு காட்டியதாகவும் அதற்கு டத்தோ டி.மோகன் அவர்கள் முழு உதவிக்கரம் நீட்டியதாகவும், அவருக்கு இவ்வேளையில்

மேலும் படிக்க
கலை உலகம்

டான்ஸ், ஃபைட் இல்லாத ’தலைவன் இருக்கிறான்’?

கமலின் விஸ்வரூபம் வந்து 4 ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்னும் விஸ்வரூபம் 2 வருவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. ஏகப்பட்ட சிக்கல்களைச் சந்தித்த சபாஷ் நாயுடு எப்போது மீண்டும் துவங்கும் என்று தெரியவில்லை. நேற்று பிக் பாஸிலேயே எனக்கும் படம் வந்து 2 ஆண்டுகள் ஆச்சு என்று பிந்து மாதவியிடம் வருத்தப்பட்டார் கமல். ஆனால் விரைவிலேயே தலைவன் இருக்கிறான் படத்தை தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. காலில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் கமலால்

மேலும் படிக்க