செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 7, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2017 > செப்டம்பர்
மற்றவைமுதன்மைச் செய்திகள்

எம்.ஏ.சி.சி. செல்கிறார் டத்தோஸ்ரீ நஜீப்!

கோலாலம்பூர், செப்.30- பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நாளை ஞாயிற்றுக்கிழமை புத்ராஜெயாவிலுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு செல்லவிருக்கிறார். ஆனால், இது அவர் மீது கூறப்படும் 1எம்.டி.பி. தொடர்பான விசாரணை காரணமாக இல்லை. மாறாக, அந்த ஆணையத்தின் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவிற்காக பிரதமர் எம்.ஏ.சி.சிக்கு செல்லவிருக்கிறார். இதற்கு முன்னர் ஊழல் தடுப்பு அமைப்பாக (பி.பி.ஆர்) இருந்த அந்த அமைப்பு ஆணையமாக உருமாற்றம் கண்டதோடு 50 ஆண்டை நிறைவு

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு 2 சம்பள உயர்வுகளை வழங்க வேண்டும்  -கியூபெக்ஸ் கோரிக்கை

கோலாலம்பூர், செப்.30- அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் நாட்டிலுள்ள அரசு ஊழியர்களுக்கு வேலை மற்றும் பதவியைப் பார்க்காமல் அனைவருக்கும் 2 சம்பள உயர்வுகளை வழங்க வேண்டும் என்று கியூபெக்ஸ் இன்று அரசிடம் கோரிக்கையை விடுத்துள்ளது. வாழ்க்கைச் செலவினத்தை எதிர்நோக்கியுள்ள அரசாங்க ஊழியர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி என அதன் தலைவர் டத்தோ அஸி மூடா குறிப்பிட்டார். மேலும், தற்போத கீழ்நிலை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வெ.

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

கடற்படை பயிற்சியில் ஏற்பட்ட களைப்பால் இருவர் மரணம்!

பெட்டாலிங் ஜெயா, செப். 30- கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இருவர், அதன் பின்னர் ஏற்பட்ட அதிக களைப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் நேற்று பேரா, சித்தியவானில் நிகழ்ந்ததாகவும் அதில், முகமட் பைஹாக்கி நிக் மாட் (வயது 28), முகமட் லைலாத்துல்மான் முகமட் சுக்ரி (வயது 26) ஆகிய இரு பயிற்சியாளர்களும் உயிரிழந்ததாக அறியப்படுகின்றது. கடுமையான பயிற்சிக்கு பின்னர் சுங்கை வாங்கி டிவிஷனைச் சேர்ந்த அவ்விருவருவரும் தாங்கள் மிகவும்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

அம்பாங், ஸ்ரீ நாகக்கன்னி ஆலயத்திற்கு மாற்று இடம் வழங்க கோரிக்கை!

அம்பாங், செப். 30- அண்மையில் உடைக்கப்பட்ட அம்பாங், தாமான் பெர்மாய் ஸ்ரீ நாகக்கன்னி ஆலயத்திற்கு மாற்று இடம் வழங்கக்கோரி அதன் நிர்வாகத்தினரும் பொதுமக்களும் மாநில அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தனர். ஸ்ரீ நாகக்கன்னி ஆலயம் அம்பாங்கில் வாழும் மக்களுக்காக கடந்த 1976ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சங்க பதிவிலாகாவில் இந்த ஆலயம் முறையாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அது உடைபடும் அபாயம் இருப்பதாக கூறி சட்டமன்ற உறுப்பினர், கவுன்சிலர், கிராமத் தலைவர் ஆகியோரின் தலைமையில்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

சிலம்பத்தை மீண்டும் சீ விளையாட்டுப் போட்டியில் இணைக்க பாடுபடுவோம்!

கோலாலம்பூர்,செப்.30- பல்வேறு சவால்களை சந்தித்துள்ள மலேசிய சிலம்பக் கழகம் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு வருவதோடு பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அதன் தேசியத் தலைவர் ஏ.என்.விஸ்வலிங்கம் கூறினார். இதில் மிக முக்கியமாக சீ விளையாட்டுப் போட்டியில் சிலம்பத்தை மீண்டும் இடம் பெறச் செய்வதையே முதன்மை நோக்கமாக கொண்டுள்ளதாக அவர் கூறினார். அதுமட்டுமின்றி, இந்தியர்களின் மூத்த பாரம்பரியக் கலையான சிலம்பத்தின் மகத்துவத்தை மற்ற நாடுகளுக்கு எடுத்துக் கூறும் வகையில் திட்டங்கள்

மேலும் படிக்க
சமூகம்விளையாட்டு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பியாலா எஸ்.எம்.சி தொடங்கியது!

கோலாலம்பூர், செப். 30- தமிழ்ப்பள்ளி மாணவர்களை பூப்பந்து விளையாட்டுத்துறையில் மேம்படுத்த வேண்டும் எனும் வேட்கையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டிலான மாபெரும் எஸ்.எம்.சி பூப்பந்து சுழற்கிண்ணப் போட்டி இன்று தேசிய அளவில் ஐந்து மாநிலங்களில் நடைபெற்றது. இந்த போட்டியின் வாயிலாக பூப்பந்து விளையாட்டுத்துறையில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறமையை அடையாளம் காண்பதோடு உலக அளவில் சாதனையை படைக்கக்கூடிய ஒரு பூப்பந்து வீரரை கண்டறிவதே இதன் அடிப்படை நோக்கம் என ஸ்ரீ

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

எங்களை ஏமாற்றி விட்டது நம்பிக்கைக் கூட்டணி! பிஎஸ்எம் குற்றச்சாட்டு

கோலாலம்பூர், செப். 30-  பி.எஸ்.எம். கட்சியை தங்களது கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக நம்பிக்கை கூட்டணி இதுநாள் வரையில் பொய் வாக்குறுதியை அளித்து வந்ததாக பி.எஸ்.எம். கட்சியின் செயற்குழு உறுப்பினர் எஸ்.அருட்செல்வம் குற்றம் சாட்டினார். நம்பிக்கைக் கூட்டணி எங்களை ஏமாற்றி விட்டதாகவும் அவர் கூறினார். பி.எஸ்.எம். கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகக் கூறப்பட்டு வந்தது எல்லாமே சுத்த பொய். இதுவரையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நம்பிக்கை கூட்டணி எங்களை அழைக்கவே இல்லை.

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

கமல் – ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 – அதிகாரபூர்வ அறிவிப்பு !

சென்னை, செப்.30 -  ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'இந்தியன் 2' படம் உருவாவது உறுதியாகியுள்ளது. பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். சில மாதங்களாகவே கமல் - ஷங்கர் இருவருமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், 'இந்தியன் 2' உருவாக வாய்ப்புகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இச்செய்தியை இருவருமே மறுக்கவில்லை. இந்நிலையில் இக்கூட்டணி தற்போது உறுதியாகியுள்ளது. தமிழ் - தெலுங்கு என இருமொழிகளிலும் 'இந்தியன் 2' உருவாகவுள்ளது.

மேலும் படிக்க
கலை உலகம்

மீண்டும் வேட்டைக்கு கிளம்பினார் ஆறுச்சாமி!

சென்னை, செப்.30 - ஹரி இயக்கத்தில் ‘சாமி’ படத்தில் ஆறுச்சாமி என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பாமாகியுள்ளது. இதன் மூலம் மீண்டும் போலீஸ் வேடத்திற்கு திரும்பியுள்ளார் விக்ரம். ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’. இதில் விக்ரமுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மேலும் கோட்டா சீனிவாசராவ், விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

35 வயதிற்கு கீழ்ப்பட்டவர்களுக்கான பிஎல்கேஎன் பதிவு திங்கள்கிழமை நடைபெறும்!

ஷா ஆலம், செப். 30- இரண்டாவது தேசிய சேவைப் பயிற்சி திட்டத்தில் (பிஎல்கேஎன் 2.0) கலந்துகொள்ள ஆர்வம் கொண்டிருக்கும் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் வருகின்ற திங்கள்கிழமை தங்கள் பகுதிகளிலுள்ள பிஎல்கேஎன் முகாம்களில் பதிவு செய்து கொள்ளலாம் என தேசிய சேவை பயிற்சித் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ முகமட் அஸ்ரி யூசோப் தெரிவித்தார். ஆர்வமுடைய தரப்பினர்கள் உடல் நலமுடன் இருக்க வேண்டும், குறிப்பாக, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அனுமதியை பெற

மேலும் படிக்க