செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 7, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2018 > மார்ச்
முதன்மைச் செய்திகள்

பொதுத் தேர்தலில் கவனம் செலுத்துங்கள் ; கட்சி தேர்தலில் அல்ல- நஜிப்

பெக்கான், மார்ச்.31 - 14 ஆவது பொதுத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் அம்னோ உறுப்பினர்கள் தேசிய முன்னணியின் வெற்றி பெற செய்வதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கேட்டு கொண்டார். அம்னோ கட்சித் தேர்தல் தொடர்பான சிந்தனையை ஒதுக்கி விட்டு தேசிய முன்னணியின் வெற்றி குறித்து சிந்திக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார். மத்தியில் ஆளும் அதிகாரத்தை முடிவு

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

தேர்தல் தொகுதி எல்லை சீரமைப்பு – தேசிய முன்னணிக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுக்கும்!

கோலாலம்பூர்,  மார்ச்.31-  தேர்தல் ஆணையம் செயல்படுத்த விருக்கும் தேர்தல் தொகுதி எல்லையின் மறுசீரமைப்பு தேசிய முன்னணிக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொண்டு வரும் என சிலாங்கூர் பல்கலைகழக துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முஹமட் ரெட்சுவான் ஒத்மான் தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் தேர்தல் தொகுதிகளின் எல்லை சீரமைக்கப்படும்போது , தேசிய முன்னணி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்து வந்துள்ளது.  சுதந்திரம் அடைந்தது முதல் தேசிய முன்னணி அதிக

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

விளம்பரங்களில் உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பளிப்பீர்! டத்தோ முருகன் அல்லிமுத்து

பிரிக்பீல்ட்ஸ், மார்ச் 31- அண்மையக் காலமாக நாட்டில் இந்திய சமூகத்தினர் அதிகம் பயன்படுத்தும் பொருட்களுக்கான விளம்பரங்களில் உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பது வேதனையளிப்பதாக எம்.ஏ. புரோடக்ஷன் ஹௌஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ முருகன் அல்லிமுத்து தெரிவித்தார். பெரும்பான்மையான விளம்பரங்களில் இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது. உள்ளூரில் பல திறமையான கலைஞர்கள் இருக்கும் போது இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பது ஏமாற்றமளிப்பதாக அவர் கூறினார். எம்.ஏ.

மேலும் படிக்க
விளையாட்டு

ஸ்டேர்லிங்கை விட்டு கொடுக்க மாட்டோம் !

மென்செஸ்டர், மார்ச்.31 - மென்செஸ்டர் சிட்டியின் மத்திய திடல் ஆட்டக்காரர் ரஹீம் ஸ்டேர்லிங்கை வாங்க ஐரோப்பாவின் முன்னணி கிளப்புகள் ஆர்வம் காட்டி வரும் வேளையில் அவரை எளிதில் இதர கிளப்புகளுக்கு விட்டு கொடுக்கப் போவதில்லை என நிர்வாகி பெப் குவார்டியோலா தெரிவித்துள்ளார். ஸ்பெயினின் ரியல் மாட்ரிட், பார்சிலோனா, பிரான்சின் பாரிஸ் செயின் ஜெர்மைன் அணிகள் ஸ்டேர்லிங்கை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. 23 வயதுடைய ஸ்டேர்லிங் தற்போது வாரம் ஒன்றுக்கு

மேலும் படிக்க
விளையாட்டு

பொக்பாவைக் கேளுங்கள் – மொரின்ஹோ!

மென்செஸ்டர், மார்ச்.31 - மென்செஸ்டர் யுனைடெட் அணியில் அதன் மத்திய திடல் ஆட்டக்காரர் போல் பொக்பாவின் ஆட்டத்தரம் குறித்து நிருபர்கள் அவரிடமே கேள்வி எழுப்ப வேண்டும் என நிர்வாகி ஜோசெ மொரின்ஹோ தெரிவித்துள்ளார். இந்த பருவத்தில் பொக்பாவின் சீரற்ற ஆட்டத்தரம் குறித்து தம்மிடம் பதில் கிடையாது என மொரின்ஹோ கூறினார். இந்த வாரம் நடைபெற்ற அனைத்துலக நட்புமுறை ஆட்டத்தில் பிரான்ஸ் 3 - 1 என்ற கோல்களில் ரஷ்யாவை வீழ்த்தியது.

மேலும் படிக்க
விளையாட்டு

மூன்று வாரங்களில் களத்திற்கு திரும்புகிறார் நெய்மார்!

போர்டோ, மார்ச்.31 - பிரேசில் தாக்குதல் நட்சத்திரம் நெய்மார் இன்னும் மூன்று வாரங்களில் மீண்டும் பி.எஸ்.ஜி அணியில் களமிறங்குவார் என அதன் பயிற்றுனர் உனாய் எமெரி தெரிவித்துள்ளார். பிரேசிலில் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வில் இருக்கும் நெய்மாருடன் தாம் தொடர்ந்து பேசி வருவதாக எமெரி குறிப்பிட்டார். பிரான்ஸ் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மொனாக்கோவுக்கு எதிராக களமிறங்க நெய்மார் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக எமெரி மேலும் தெரிவித்தார். கடந்த

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

இன்று உங்களது ராசி பலன்

மேஷம் இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக அமையும். புதிய முயற்சிகளைத் தொடங்குவது சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் உற்சாகமான நிலை காணப்படும். அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.   ரிஷபம் இன்று நீங்கள் எதிலும் பொருமையை கடைப்பிடிக்க வேண்டும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடுவதை தவிர்க்கவும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

தங்கரத்தினத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது

கோலாலம்பூர், மார்ச் 30- வர்த்தக நோக்கத்திற்காக துபாய் சென்ற தங்கரத்தினம் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி மரணமடைந்தார். பொருளாதார வசதியில்லாத காரணத்தால் பல இன்னல்களுக்கிடையே அவரது உடல் நேற்று மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டது. இன்று கிளானா ஜெயா அரசு மின் சுடலையில் தனது கணவரின் சடலம் மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட்டபோது திருமதி கெர்ட்ரூட் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தனது கணவரின்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

செரெண்டா தமிழ்ப்பள்ளிக்கான வெ.6.43 மில்லியன் நிதி மாயமாகவில்லை!

புத்ராஜெயா, மார்ச் 30- கோலசிலாங்கூர் மிஞ்சாக் தோட்டத்திலிருந்து உலுசிலாங்கூர் தொகுதியிலுள்ள செரெண்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், செரெண்டா தமிழ்ப்பள்ளியாக அழைக்கப்படும் அப்புதிய பாடசாலையை அமைப்பதற்கான அரசாங்கத்தின் வெ.6.43 மில்லியன் நிதியானது கல்வி அமைச்சில் பத்திரமாக இருப்பதாக அவ்வமைச்சின் துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் விளக்கமளித்தார். அந்த மானியம் மாயமாகிவிட்டதாக ஒருசில விஷமிகள் பொய்யுரைத்து வருவதாகவும் அவர்களின் கீழ்த்தரமான நடவடிக்கையானது, அப்பள்ளியை நிறுவவிடாமல் தடுத்து வருகின்ற ஒரு சுயநலவாத கும்பலுக்கு ஒத்து ஊதுவதாக அமைந்திருக்கிறது

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

1எம்.டி.பி, அரசாங்க நிதிகளை நஜீப் திருடவில்லை! டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன்

கோலாலம்பூர், மார்ச் 30- பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் 1எம்.டி.பி, அரசாங்க நிதிகளைத் திருடியதாக எதிர்க்கட்சிகள் அவதூறுகளைப் பரப்பி வருகின்றன. நஜீப் அத்தகைய நிதிகளைத் திருடவில்லை என மலேசிய இந்திய  வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் (மைக்கி) தலைவர் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் தெரிவித்தார். நாட்டின் பிரதமர்களிலேயே இன பாகுபாடு பார்க்காமல் அனைத்து இன மக்களுக்கும் உதவிகளை வழங்கி வருபவர் டத்தோஸ்ரீ நஜீப். அவரது தலைமைத்துவம் நீடிக்கவும் வரும்

மேலும் படிக்க