வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2018 > ஜூலை
சமூகம்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பேட்மிண்டன் போட்டி: ரொக்கப்பரிசு 5000!

கோலாலம்பூர், ஜூலை 31 விளையாட்டுத்துறையில் இந்திய மாணவர்கள் சாதிப்பதை உறுதிப்படுத்த போட்டி விளையாட்டுக்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் ரிஷிகரன் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் ஸ்ரீமுருகன் கல்வி நிலையத்தின் சமூக கடப்பாடு தம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பேட்மிண்டன் விளையாட்டில் சிறந்த அடைநிலையை பதிவு செய்வதோடு அவ்விளையாட்டு குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என 3ஆவது ஆண்டாக

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்காக கல்வியும் சிந்தனையும் நூல் வெளியீட்டு விழா

கோலாலம்பூர், ஜூலை 31- தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தலுக்கு உதவும் பொருட்டு முன்னாள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியும் தமிழ்த்துறை தலைவராக இருந்துவரும் விரிவுரையாளருமான கு.நாராயணசாமி கல்வியும் சிந்தனையும் எனும் நூலை எழுதியுள்ளார். இதனை பினாங்கு மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன் வெளியீடு செய்கிறார். இந்த நூலை ஆய்வு செய்யும் தொகுப்பும் இந்நிகழ்ச்சியில் இடம் பெறும். இதில் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களான மு.கோபாலனும் முன்னாள் பள்ளி ஆய்வாளரான க.குணசேகரனும் கலந்து

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

பினாங்கு வெள்ளத் தடுப்பு திட்டத்திற்கு வெ. 15 கோடி நிதி

ஜோர்ஜ் டவுன், ஜூலை 31 பினாங்கு வெள்ளத் தடுப்பு திட்டத்திற்கு 15 கோடி வெள்ளி நிதியளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டு வந்த அத்திட்டம் அடுத்தாண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பூர்த்தியடையும் என்றும் அத்திட்டத்திற்கு வடிகால் நீர்பாசன இலாகா குறைந்தது வெ. 60 கோடி செலவாகும் என கணிக்கப்பட்டிருப்பதாகவும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜக்டீப் சிங் டியோ தெரிவித்தார்.

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஏசான் குழுமத்தின் ஏற்பாட்டில் ஈகை பெருநாள் -ஹஜ் பெருநாள் இன்னிசை இரவு

கோலாலம்பூர், ஜூலை 31 ஏசான் குழுமத்தின் ஏற்பாட்டில் ஈகை பெருநாள்-ஹஜ் பெருநாள் இன்னிசை இரவு எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரபல பாடகர் இ.எம் ஹனிபாவின் குரலிசையில் உள்ளூர் கலைஞர்கள் பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்விக்கப் போகின்றனர். இந்திய முஸ்லிம்கள் மட்டுமின்றி இந்தியர்களும் ஹனிபாவின் ரசிகர்களாக உள்ளனர். அவர்களை மகிழ்ச்சி படுத்தும் வகையிலும் ஈகை பெருநாள் பெருநாளை முன்னிட்டும் இந்த

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

கலைஞரின் நலம் விசாரிக்க நேரில் சென்ற மஇகா தலைவர்கள்

கோலாலம்பூர், ஜூலை 31 திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக மஇகாவின் தேசியத்தலைவரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான டான்ஸ்ரீ எஸ்.விக்னேஷ்வரன், மஇகாவின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, உதவித்தலைவரும், செனட்டருமான டத்தோ டி.மோகன், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகியோர் தமிழகம் புறப்பட்டனர்.அங்கு செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து உள்ளனர். கடந்த வாரம் முதல் உடல் நலக்குறைவினால் கலைஞர்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

3ஆவது எம்ஆர்டி திட்டம் ஒத்தி வைப்பு -அந்தோணி லோக்

ஷா ஆலம், ஜூலை 31 3ஆவது எம்ஆர்டி திட்டம் ரத்துச் செய்யப்படாமல் ஒத்திவைக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர், அந்தோணி லோக் சியூ பூக் தெரிவித்தார். அரசின் கடன் சுமையைக் குறைக்கும் நொக்கில் இந்தத் திட்டம் ஒத்தி வைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இதன் நிர்மாணிப்புத் திட்டம் எப்போது மேற்கொள்ளப்படும் என்பது குறித்து அமைச்சரவை தீர்மானிக்கும். தற்போது நாட்டின் நிதி நிலைமை சீரடைந்து வருகிறது. எனவே, முதலில் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற்றால் விலக்களிப்பு -ரபிஸி ரம்லி

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 31 தம் மீது குற்றச்சாட்டு இருந்தாலும் இம்மாதம் நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தலின் துணைத் தலைவர் பதவியில் வெற்றி பெற்றால் ஆர்ஓஎஸ் எனப்படும் சங்கங்களின் பதிவிலாகாவிடமிருந்து தமக்கு விலக்களிப்பு வழங்கப்படும் என்று பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி தெரிவித்தார். இதில் எனக்கு விலக்களிப்பு கிடைக்கிறது. இல்லா விட்டால் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இருந்திருக்காது என்று அவர் சொன்னார். கட்சித் தேர்தலில் போட்டியிட ஆர்ஒஎஸ்சின் அனுமதி

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

பிகேஆர் தலைவர் பதவிக்கு போட்டியா? டத்தோஸ்ரீ அஸ்மின் அலி சூசக பதில்

ஷா ஆலம், ஜூலை 31 வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள சுங்கை கண்டிஸ் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்குப் பின்னரே பிகேஆர் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து தாம் முடிவெடுக்கப்போவதாக அதன் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார். கட்சி உதவித் தலைவர் ரபிஸி ரம்லி துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது பற்றி கேட்ட போது, கட்சியின் போராட்டத்திற்கு யார் வேண்டுமானாலும் தங்களின் பங்களிப்பை வழங்கலாம். இதில் ரபிஸியின் முடிவை

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

ஜமால் யூனுசிற்கு ஜாமின் இல்லை

கோலாலம்பூர் ஜூலை 30 இரண்டு சூதாட்ட மையங்களில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டுகளை எதிர் நோக்கியிருக்கும் அம்னோ சுங்கை பெசார் தொகுதி தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் முகமட் யூனோஸ் மீதான ஜாமின் உத்தரவை இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மீட்டுக் கொண்டது. ஜமால் யூனுசுக்கு எதிராக ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் விதிக்கப்பட்ட தலா 3,000 வெள்ளி ஜாமினை மீட்டுக் கொள்ளக் கோரி துணை பப்ளிக் பிராசிகியூட்டர் நூராஷிமா ஹாஷிம் மற்றும் ராய்ஹானா

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி ரத்தால் கூடுதல் இழப்பு-டத்தோஸ்ரீ நஜீப்

கோலாலம்பூர், ஜூலை 30 ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரியை ரத்து செய்த பின்னர் அதனால் ஏற்படக்கூடிய வருமான இழப்பு அதிகமாக இருக்கும் என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் எச்சரித்துள்ளார். அந்த இழப்பு நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் சரிவை ஏற்படுத்தும். அதனை ஈடுகட்ட அரசு வேறு வழிகளில் வருமானத்தை ஈட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அவர் சொன்னார். ஜிஎஸ்டிக்குப் பதிலாக எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை

மேலும் படிக்க