செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 7, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2018 > ஆகஸ்ட்
முதன்மைச் செய்திகள்

நஜீப்பின் வழக்கிலிருந்து டோம்மி தோமஸ் விலகல்

கோலாலம்பூர், ஆக. 31 முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக் சம்பந்தமான 1எம்டிபி ஊழல் வழக்கில் அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக நீதித் துறைத் தலைவர் டோம்மி தோமஸ் அறிவித்துள்ளார். அந்தப் பொறுப்பை ஏற்பது சிரமம் என்பதால், மேற்கண்ட முடிவை எடுத்துள்ளதாகக் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். அந்த வழக்கை நடத்த, அதற்கான விவரங்களைச் சேகரித்து வாதங்களைத் தயாரிக்கும் பணிகள் அதிகம் என்பதால்,

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

கலாசார மண்டபத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது -டான்ஸ்ரீ டத்தோ நடராஜா

பத்துகேவ்ஸ், ஆக. 31 பத்துமலை திருத்தலத்தில் கலாசார மண்டபத்தையும், நீரிழிவு சுத்திகரிப்பு மையத்தையும் அமைக்க வேண்டும் என தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதற்கான அடிப்படை ஆவணங்களை சமர்ப்பித்தபிறகும் இதுவரையில் நகராண்மைக்கழகம் எந்த ஒப்புதலையும் வழங்கவில்லையென மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர்.நடராஜா தெரிவித்தார். பத்துமலையில் பல்வேறான மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் கலாசார மண்டபத்தையும் நீரிழிவு சுத்திகரிப்பு மையத்தையும் இங்கே அமைக்கவேண்டும் என நாங்கள் முடிவு

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

பத்துமலையில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா; 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர்

பத்துகேவ்ஸ், ஆக. 31 மலேசியாவின் தாய்க் கோயிலான மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் பத்துமலை, சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரண்டார்கள். அடிவாரத் திருக்கோயில்கள், மேல் குகைத் திருக்கோயில்கள் என 13 திருக்கோயில்களுக்கான திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று மிக விமர்சையாக நடந்தது. இந்த நன்னீராட்டு பெருவிழாவில் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசியாவின் கட்டமைப்புத் துறையின் சிறப்பு தூதர் துன்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

புத்ராஜெயாவில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

புத்ராஜெயா, ஆக 31 நாட்டின் 61 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் இன்று புத்ராஜெயாவில் பிரமாண்டமான முறையில் கொண்டாடப்பட்டது. 61 ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் பிரதமர் துன் மகாதீர் தலையில் நடைபெற்ற இந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ‘சயாங்கி மலேசியாக்கூ' எனும் கருப் பொருளில் இந்த சுதந்திர தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு புத்ராஜெயா

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

மலேசிய நம்பிக்கை நிதியம் நிறுத்தப்படுமா?

கோலாலம்பூர், ஆக 30- தாபுங் ஹராப்பான் எனப்படும் மலேசிய நம்பிக்கை நிதியம் அடுத்த மாதம் நிறுத்தப்படும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். இந்த நிதியம் நிறுத்தப்படும் இறுதி நாள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இத்திட்டத்தை அடுத்த மாதம் நிறுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இன்று ஆசிய வணிகத் தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

கைது நடவடிக்கையை தொடங்கியது குடிநுழைவுத் துறை

புத்ராஜெயா, ஆக.30 சட்டவிரோதக் குடியேறிகளையும் முதலாளிமார்களையும் கைது செய்யும் நடவடிக்கையை குடிநுழைவுத் துறை தொடங்கி விட்டதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தபார் அலி தெரிவித்தார். சட்டவிரோதக் குடியேறிகள் தானாகச் சரணடையும் திட்டம் ஒரு முடிவுக்கு வந்து விட்டதால் இந்த நடவட்க்கை மேற்கொள்ளப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டார். சட்டவிரோத குடியேறிகள் இந்நாட்டில் அதிகமாக இருப்பதால் சமூகக் கலாச்சாரமும் மாறியுள்ளது. ஒரு சில இடங்களில் இவர்களின் ஆதிக்கம்தான் உள்ளது. அதனால் சுதந்திர தினத்தை

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

ராகாவின் ‘இதுதான் மலேசியா குறும்படம்

கோலாலம்பூர், ஆக 30 தேசிய தினத்தை முன்னிட்டு நம் நாட்டின் சிறப்புகளை பல கோணங்களில் சித்தரிக்கும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் காணலாம். அவ்வகையில், இவ்வாண்டு தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் ராகா இதுதான் மலேசியா எனும் ஒரு குறும்படத்தைத் தங்களுடைய அதிகாரப்பூர்வ முகநூலில் வெளியிட்டுள்ளார்கள். 10 வருடங்கள் கழித்து தன்னுடைய தாய் மண்ணான மலேசியாவிற்கு திரும்பும் ஒரு இளைஞரின் கதையுடன் தொடங்கும் இக்குறும்படத்தில் கலக்கல் காலை அறிவிப்பாளர்கள் ஆனந்தா மற்றும்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

1 எம்.டி.பி மீதான விசாரணை 60 விழுக்காடு நிறைவுப் பெற்றுள்ளது !

புத்ராஜெயா, ஆக.30- ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் ( 1 எம்.டி.பி ) மீதான விசாரணை 60 விழுக்காடு முழுமைப் பெற்றுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. தற்போது அந்த நிறுவனம் தொடர்பில் உள்நாட்டில் உள்ள ஆதாரங்களையும் தகவல்களையும் சேர்க்கும் பணி நிறைவுப் பெற விருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணைத் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ ஆசாம் பாக்கி தெரிவித்தார். அதேவேளையில் அந்த நிறுவனத்தில்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் வாய்ப்பு பெட்ரோனுக்கும் வழங்கப்பட்டது !

கோலாலம்பூர், ஆக.30 - அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நிறுவனங்களில்  ஒன்றாக பெட்ரோன் நிறுவனம் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பிலான கடிதம் ஒன்று சமூக ஊடங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. பிரதமர் துன் டாக்டர் மஹாதீர் முஹம்மட்டின் மகன், டான் ஶ்ரீ மிர்சான் , பெட்ரோன்  நிறுவனத்தின்  இயக்குனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த கடிதம் அனைத்து அமைச்சுகளுக்கு அனுப்பபட்டுள்ளது என்பதை மலேசியகினி அகப்பக்கம் தனது செய்தியில் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில்,

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

தீபாவளி ரேசில் இருந்து பின் வாங்கிய என்.ஜி.கே !

சூர்யாவின் ’என்ஜிகே’ படம் தீபாவளிக்கு வெளியாகாது என்பதை படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் செல்வராகவன் சூர்யா கூட்டணியில் உருவாகும் என்.ஜி.கே படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படம் முதலில் தீபாவளிக்கு வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதே போல் முருகதாஸ் விஜய்யை வைத்து இயக்கி வரும் சர்கார் படமும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்ஜிகே

மேலும் படிக்க