வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2018 > அக்டோபர்
முதன்மைச் செய்திகள்

கார்டீனியா ரொட்டிகளின் விலை ஏற்றம்

பெட்டாலிங் ஜெயா, அக் 31 பொருள், தயாரிப்புகளுக்கான செலவு உயர்ந்து விட்டதால் தனது நிறுவனத்தின் ஒரு சில ரொட்டிகளின் விலையும் நாளை தொடங்கி அதிகரிக்கும் என கார்டீனியா பேக்கரிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த தயாரிப்புகளில் Auntie Rosies Original Homestyle, Auntie Rosies Natural Pandan 3 வெள்ளியாகவும் Delicia Milky Chocolate 7 வெள்ளி 20 காசாகவும், Hazelnut Chocolate 9 வெள்ளி 10 காசாகவும் விலை உயர்த்தப்படும்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

மரியா சின்னை விமர்சித்த ஜமால்; வெ. 300,000 இழப்பீடு செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர், அக் 31 பெர்சே 2.0வின் முன்னாள் தலைவர் மரியா சின் அப்துல்லாவை அவதூறாக விமர்சித்த டத்தோஸ்ரீ ஜமால் யூனோஸ், அவருக்கு வெ. 300,000 இழப்பீடு தொகையை செலுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மரியாவின் வழக்கறிஞர் என்.சுரேந்திரன், ஜமாலின் விமர்சனம் மரியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து அவப்பெயரை உருவாக்கியிருப்பதாக நீதிபதி டத்தோ முகமட் ஸாக்கி அப்துல் வகாப் தெரித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஜமால் தமது தற்காப்பு வாதத்தில் அம்மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்குத்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

1, 2, 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கானத் தேர்வுகள் அகற்றப்படுமா?

கோலாலம்பூர், அக் 31 அடுத்தாண்டு தொடங்கி ஆரம்பப் பள்ளிகளில் 1, 2, 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கானத் தேர்வுகள் அகற்றப்படும் என்று கல்வி அமைச்சர், டாக்டர் மஸ்லி மாலேக் தெரிவித்துள்ளார். அந்த தேர்வுகளுக்கு பதிலாக மதிப்பீட்டு முறையிலானத் தேர்வு நடத்தப்படும் என்று நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், இதுபற்றிய மேல் விவரங்களைக் கூற அவர் மறுத்து விட்டார்.

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

வெ.260 கோடி எங்கிருந்து வந்தது என்பது அனைவரும் அறிந்ததே -துன் மகாதீர்

கோலாலம்பூர், அக்.30- சவூதி அரேபியா நன்கொடையாக 260 கோடி வெள்ளி கொடுத்தது என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால் இதுபற்றி உலகத்திற்கே தெரியும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். அந்த 260 கோடி வெள்ளி சவூதி அரேபியா அரசு நன்கொடையாகக் கொடுத்தது என நஜீப் தொடர்ந்து கூறி வருவது பற்றி கேட்ட போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் படிக்க
உலகம்முதன்மைச் செய்திகள்

இந்தோனேசியாவில் விமானம் விபத்து; 24 சடலங்கள் மீட்பு

ஜகார்த்தா, அக் 30 இந்தோனேசியாவின் லயன் ஏர் விமானம் நேற்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 24 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானத்தின் உடைந்த பாகங்கள் பயணிகளுக்குச் சொந்தமான சில பொருட்களும் கடலில் மீட்கப்பட்டதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜவாவிற்கு அருகே தஞ்சோங் கரவாங் கடல் பகுதியில் விழுந்த அந்த விமானத்தை கண்டுப்பிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று காலை 24 உடல்கள் மீட்கப்பட்டதோடு விமானத்தின் உடைந்த பாகங்கள்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

புதிய வீடுகளின் விலை 10% குறைந்துள்ளது

கோலாலம்பூர், அக்.30 எஸ்எஸ்டி எனப்படும் விற்பனைச் சேவை வரி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து நிர்மாணிக்கப்படாத புதிய வீடுகளின் விலை 10 விழுக்காடு குறைந்துள்ளதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். கட்டுமானச் சேவைகளுக்கு எஸ்எஸ்டி வரி விதிக்கப்படாததால் வீடுகளுக்கான விலை 5 விழுகாட்டிலிருந்து 10 விழுக்காடு வரை குறையும். இதற்கு முன் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி எனப்படும் பொருள் மற்றும் சேவை வரியின் கீழ் கட்டுமானச் சேவைக்கு 6 விழுக்காடு வரி

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

இன்னும் அதிகமான அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்

கோலாலம்பூர், அக். 30 முந்தையை ஆட்சியில் லஞ்ச விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட இன்னும் அதிகமான அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை பிடித்து 6 மாதங்கள் ஆகிவிட்டன. அரசாங்கத்தை மறுசீரமைத்து வருகிறோம். உண்மையில் எங்களுக்கு அனுபவம் வாய்ந்த அரசு அதிகாரிகள் தேவைப்படுகின்றனர். இருப்பினும், அனுபவம் வாய்ந்த அரசு அதிகாரிகளே இந்த லஞ்ச விவகாரங்களில் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர்கள் மீது

மேலும் படிக்க
விளையாட்டு

இங்கிலீஷ் பிரீமியர் லீக் – மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியது மென்செஸ்டர் சிட்டி !

லண்டன், அக்.30- இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் நடப்பு வெற்றியாளரான மென்செஸ்டர் சிட்டி மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியது. திங்கட்கிழமை ( மலேசிய நேரப்படி செவ்வாய்கிழமை அதிகாலை ) நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 1 - 0 என்ற கோலில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டியின் ஒரே கோலை ரியாட் மாஹ்ரேஸ் போட்டார். ஆட்டம் தொடங்கிய ஆறாவது நிமிடத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் தற்காப்பு ஆட்டக்காரர்

மேலும் படிக்க
விளையாட்டு

பயிற்றுனரை நீக்கியது ரியல் மாட்ரிட் !

மாட்ரிட், அக்.30- ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் ரியல் மாட்ரிட் , ஜூலேன் லொப்பேதேகுவேய்யை பயிற்றுனர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது.  ரியல் மாட்ரிட் பயிற்றுனராக பொறுப்பேற்ற 139 நாட்களுக்குப் பின்னர், லொப்பேதேகுவே அந்த கிளப்பை விட்டு வெளியேறுகிறார. 2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் ஸ்பெயின் கால்பந்து அணியை வழிநடத்த தயாராக இருந்த லொப்பேதேகுவே, அதன் பின்னர் ரியல் மாட்ரிட் கிளப்பில் இணையப்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

செல்பி எடுத்த இளைஞரின் போனை தட்டிவிட்டது ஏன்?.. சிவக்குமார் விளக்கம்!

சென்னை: தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது எதனால் என்று நடிகர் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சிவக்குமார் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் போனை கோபமாக தள்ளிவிட்டது பெரிய வைரலாகி உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டுப்பட்டு இருக்கும் தனியார் கருத்தரிப்பு மையம் ஒன்றை திறக்க நடிகர் சிவக்குமார் இன்று சென்றார் இந்த நிலையில், சிவக்குமார் அங்கு வந்த போது

மேலும் படிக்க