வியாழக்கிழமை, ஜனவரி 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2019 > ஜனவரி
அரசியல்முதன்மைச் செய்திகள்

இந்திய அரசு-மஇகா நட்பு தொடரும் – டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்

வாரணாசி ஜன 23- இந்திய அரசுடன் மஇகா எந்தக் காலத்திலும் இணைந்து செயலாற்றும். குறிப்பாக அது இந்திய அரசுடன் நெருங்கிய நட்புறவை என்றுமே கொண்டிருக்கும் என மஇகாவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார். உத்தரபிரதேசம் வாரணாசியில் நடைபெற்ற பரவாசி பாரதீய திவாஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக நேரடியாகச் சந்தித்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மஇகா இந்திய அரசுடன் எப்பொழுதும் நட்புறவைப் பேணும் என

மேலும் படிக்க
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

லஞ்ச ஊழலை குறைக்க இணையத்தளம் மூலம் அந்நியத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பம்

புத்ராஜெயா, ஜன.23 அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் விண்ணப்பம் உட்பட மனித வள அமைச்சின் பணம் சம்பந்தப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் இனி இணையத்தளம் வாயிலாகத்தான் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார். இணையத்தளம் வாயிலாக நடவடிக்கைகளை மேற்கொள்வதனால் அவர்கள் அமைச்சைச் சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அதோடு, லஞ்ச ஊழலையும் குறைக்க முடியும் என்று அவர் சொன்னார். முந்தைய அரசுக்கு இந்த லஞ்ச ஊழல் பெரிய பிரச்னையாக இருந்தது. நமது

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

டாக்சி மோதி 11 வயது சிறுமி மரணம்

கோலாலம்பூர், ஜன.23-  பங்சார், ஜாலான் தண்டோக் சாலையில் இன்று காலை 7.00 மணியளவில் டாக்சி மோதியதில் அதிரா பத்ரிசேஷா எனும் 11 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். தனது அண்ணன் அம்ஸார் ஹஸிக் அஜிசுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்குச் சென்றக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது. புக்கிட் பண்டாராயா தேசியப்பள்ளி மாணவியான அதிராவுக்கு தலை, உடல், கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமுற்றார் என கோலாலம்பூர் போக்குவரத்து

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

பினாங்கு பாலத்திலிருந்து கடலில் விழுந்த வாகனம் மீட்கப்பட்டது

ஜோர்ஜ்டவுன், ஜன. 22 மூன்று நாள்களுக்கு முன் பினாங்கு பாலத்தில் நிகழ்ந்த பயங்கர விபத்தால் கடலில் விழுந்த வெள்ளை நிற எஸ்யுவி மஸ்டா வாகனம் இன்று மாலை 5.30 மணியளவில் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட வாகனத்தில் அக்காரின் ஓட்டுநரான மோய் யுன் பெங் (வயது 20) எனும் மாணவரின் சடலம் ஓட்டுநரின் இருக்கையில் அமர்ந்தபடி காணப்பட்டது. அந்தக் காரை மீட்கும் போது அதனைக் கட்டியிருந்த கயிறுகள் அறுந்ததால் சற்று தாமதமானது. எனினும்,

மேலும் படிக்க
அரசியல்இந்தியா/ ஈழம்உலகம்முதன்மைச் செய்திகள்

விசா நடைமுறை கடப்பிதழ் இவை இரண்டிலும் தளர்வு! – நரேந்திர மோடி

வாரணாசி, ஜன. 22- விசா கட்டணம் கடப்பிதழ் போன்றவற்றில் கெடுபிடிகள் அதிகமாக இருப்பதால் அதில் தளர்வு ஏற்படும் என நரேந்திர மோடி தெரிவித்தார். அதற்கான நடைமுறையை இந்திய அரசு முன்னெடுத்து வருவதாகவும் கூடிய விரைவில் இதற்கான நடவடிக்கையை முழுமை பெறும் என்றும் பிரவாசி பாரதீய திவாஸ் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு கூறினார். வளர்ந்து வரும் நாடுகளின் மத்தியில் இந்தியா மிகச்சிறந்த அடைவு நிலையை

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்கலை உலகம்முதன்மைச் செய்திகள்

அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; தல அஜித்தின் அதிரடி அறிக்கை

சென்னை, ஜன 22 தல அஜித் ரசிகர்கள் குறிப்பிட்ட கட்சியில் இணைந்திருப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வந்தது. அதோடு சமூக வலைத்தளங்களிலும் அஜித் அரசியலில் ஈடுபடபோவதாக செய்திகள் வைரலாக பரவி வந்தது. இதையறிந்த அஜித் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரை படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

பத்துமலை தைப்பூசத்தில் பட்டாசு வெடித்தது; 34 பேர் காயம்

கோம்பாக், ஜன.22 பத்துமலை தைப்பூசத்தில் பட்டாசு வெடித்ததில் 34 பேர் காயமுற்றதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சம்சோர் மாரொப் தெரிவித்தார். நேற்று இரவு 8.30 மணியளவில் ஆலயம் அருகே வானில் வெடிக்க வேண்டிய பட்டாசு திடீரென சாலையில் வெடித்ததில் அருகிலிருந்து 34 பேர் காயமடைந்ததாக அவர் சொன்னார். இச்சம்பவத்தில் காயமுற்றவர்களில் 3 பேர் செலாயாங் பெரிய மருத்துவமனைக்கும் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு 2 பேரும், ஒருவர் சுங்கை

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்உலகம்முதன்மைச் செய்திகள்

நியூசிலாந்து செல்ல கேரளாவில் மாயமான 230 பேர்: பெரும்பான்மையானோர் தமிழர்களா?

கேரளா, ஜன. 22- கேரளாவின் முன்னம்பம் துறைமுகத்திலிருந்து படகு வழியாக நியூசிலாந்து அடையும் முயற்சியில் 230 பேர் மாயமாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த ஜனவரி 11 அன்று கேரளாவின் முன்னம்பம் துறைமுகத்திலிருந்து 50 பேரின் உடைமைகளை திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்களூர் கோயிலில் கைப்பற்றிய கேரள காவல்துறை, படகு வழியாக நியூசிலாந்து செல்லும் முயற்சியில் 50 பேர் ஈடுபட்டுள்ளதாக சந்தேகித்தது. இந்த நிலையில், அடுத்தடுத்த

மேலும் படிக்க
அரசியல்இந்தியா/ ஈழம்சமூகம்முதன்மைச் செய்திகள்

புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான விசா கட்டணத்தை அகற்றுங்கள்! இரட்டை குடியுரிமையும் வேண்டும்

வாரணாசி, ஜன. 22- புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான விசா கட்டணத்தை இந்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரவாசி பாரதீய திவாஸ் மாநாட்டில் பங்கேற்ற புலம்பெயர்ந்த பேராளர்கள் முன்வைத்தனர். முன்னதாக நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கண்வாட் சிங் பிரவாசி மாநாட்டில் இந்த கோரிக்கையை முன் வைத்தார். மலேசியாவில் இருந்து அதிகமான பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள நிலையில் நம்பிக்கை

மேலும் படிக்க
அரசியல்இந்தியா/ ஈழம்உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

களைக்கட்டியது பிரவாசி மாநாடு! முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம்

வாரணாசி, ஜன. 22- உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் 15ஆவது புலம்பெயர்ந்த இந்தியர்களின் மாநாடு பரவாசி பாரதிய திவாஸ் ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறகின்றது. ‘இந்தியாவை உருவாக்குவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு என்பதுதான் இந்த மாநாட்டில் கருப்பொருள். மகாத்மா காந்தி அடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்தடைந்த நாளான ஜனவரி 7 முதல் 9ஆம் தேதிவரை இந்த மாநாடு நடைபெறுவதே வழக்கம். ஆனால்

மேலும் படிக்க