வியாழக்கிழமை, ஏப்ரல் 2, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2019 > ஏப்ரல்
அரசியல்

பிபிஆர் லெம்பா சுபாங் 1 குடியிருப்பாளர்களுக்கான உணவு வங்கி திட்டம் தொடரப்படும்! – மரியா சின் தகவல்

பெட்டாலிங் ஜெயா, ஏப். 30-      உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் ஊட்டச்சத்து உணவு பொருள்கள் அடங்கிய உணவு வங்கி திட்டம் இங்குள்ள பிபிஆர் லெம்பா சுபாங் 1  குடியிருப்பாளர்களுக்கு அடுத்த ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும் என்று பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர்  மரியா சின் அப்துல்லா கூறினார்.   இவ்வட்டாரத்தில் வறிய நிலையில் வாழும் குடும்பங்களின் உணவு தேவையை நிறைவேற்றுவதில் தமது நாடாளுமன்ற அலுவலகத்தின் உணவு வங்கி திட்டம்

மேலும் படிக்க
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை!

சுங்கைப்பட்டாணி, ஏப்ரல் 30- 29 - 30 ஏப்ரல் - வட மலேசியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று முடிந்த உலகளாவிய புத்தாக்க ஆய்வு, உருவாக்கம் மற்றும் செயலிகள் கண்காட்சியில் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் தேசிய வகை சப்ராங் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த செல்வா இலெட்சுமணன், முனிதா துலுக்கானம், கவித்திரா வாசுதேவன் மற்றும் தேசிய வகை சுங்கை குருயிட் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த நரேஸ்

மேலும் படிக்க
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

ராகாவின் ஏற்பாட்டில் கிள்ளானில் துப்புரவு பணி

கோலாலம்பூர், ஏப்ரல் 30- நம் வாழ்க்கை முறை மாற குப்பைகளின் அளவும் கணிசமாக அதிகரித்தே வருகின்றது. மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் முறையாக அகற்றபடாமல், வீதியோரம் ஆங்காங்கே குவிக்கப்பட்டுக் கிடக்கின்றன. ‘யாயாசன் ஏரா சூரியா’, ‘MyReturns’ செயலி மற்றும் செந்தோசா சட்டமன்றத்துடன் இணைந்து கடந்த சனிக்கிழமை 27-ஆம் தேதி ராகா வானொலி நிலையம் ‘Clean & Green’ எனும் துப்புரவு பணியை கிள்ளான் செந்தோசாவில் மேற்கொண்டனர். செந்தோசாவில் பரவலாக காணப்படும்

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

அரசியல் உளவு தகவல்களுக்காக நஜீப் 25லட்சம் வெள்ளி வழங்கினார்! – ஹபிபுல் ரஹ்மான் சாட்சியம்

கோலாலம்பூர் ஏப்ரல் 30- உளவு தகவல்களை பெறுவதற்காக தமக்கு அறிமுகமான நெருக்கமான ஒருவருக்கு 25 லட்சம் வெள்ளியை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் கொடுத்ததாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தேசிய முன்னணியின் அரசியல் நன்மைக்காக இந்த பணம் வழங்கப்பட்டதாக ஹபிபுல் ரஹ்மான் என்ற சாட்சி தெரிவித்தார். வழக்கறிஞர் நிறுவனம் மூலம் இந்த பணம் காசோலையாக வழங்கப்பட்டதாகவும் அவர் சொன்னார். அரசியல் உறவு மற்றும் அரசியல் தரப்பைச் சேர்ந்தவர்களிடையே

மேலும் படிக்க
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சிவபாலன்  உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது!

ஈப்போ,  ஏப்ரல் 30- ஒவ்வோர் ஆண்டும் கல்வித் துறையில் சிறப்பான சேவையை வழங்கும் ஆசிரியர்களுக்கு அவர்கள் சார்ந்த மாவட்டக் கல்வி இலாகா நற்சேவையாளர் விருது வழங்கி கெளரவிப்பது வழக்கம். நாடு தழுவிய அளவில் இந்த நற்சேவையாளர் விருதளிப்பு விழா தற்பொழுது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மலேசியாவிலேயே அதிகமான தமிழ்ப்பள்ளிகளைக் கொண்ட பேரா மாநிலத்தைச் சார்ந்த இளம் தமிழாசிரியர்கள் சிலர் கடந்தாண்டு நனிச்சிறந்த கல்விச் சேவையைப் பதிவு செய்து இவ்வாண்டு

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

சுகாதார விழிப்புணர்வு இந்தியர்கள் மத்தியில் குறைவாக உள்ளது! டாக்டர் சத்திய பிரகாஷ்

ரவாங் ஏப்ரல் 30- சுகாதார விழிப்புணர்வு இந்தியர்கள் மத்தியில் மிகக் குறைவாகவே உள்ளது. அதனை கருத்தில் கொண்டுதான் எஸ்பி கேர் கிளினிக் தொடர்ந்து இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருவதாக அதன் தலைவர் டாக்டர் சத்திய பிரகாஷ் தெரிவித்தார். சூழ்நிலைக்கு ஏற்ப மனிதர்கள் சுகாதார பிரச்சினையை எதிர் கொள்கிறார்கள். குறிப்பாக அவர்கள் வேலை செய்யும் இடங்களைப் பொறுத்து சுகாதாரமும் அமைகின்றது என அவர் தெரிவித்தார். இளமைக் காலத்தில் தொடர்ந்து வேலை

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

தொழில்துறை 4.0 குறித்து இந்திய மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்! – கரிஷ்மா ராஜகுமார் வலியுறுத்து

கோலாலம்பூர் ஏப்ரல் 30- இந்திய மாணவர்கள் சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதற்காக தொழில்துறை 4.0 குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என கரிஷ்மா உலகளாவிய கல்லூரியின் முதல்வர் வி. ராஜகுமார் தெரிவித்தார். உலகம் தொழில்துறை 4.0 நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அது குறித்து மாணவர்கள் அறிந்திருக்க தவறி விட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய பின்னடைவை சந்திப்பார்கள் என்பதையும் அவர் நினைவுறுத்தினார். இதனைக் கருத்தில் கொண்டு கரிஷ்மா உலகளாவிய கல்லூரியில் தொழில் துறை 4.0

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

சிபில்ட் ஆலயத்தை போல மற்றொரு ஆலயத்திற்கும் ஆபத்து!

கோலாலம்பூர் ஏப்ரல் 30- சிபில்ட் மகா மாரியம்மன் ஆலயத்தில் மேம்பாட்டு நிறுவனம் செய்த அட்டூழியம் குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதேபோல் டியுக் 2 நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் உடைக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கி இருப்பதாக அதன் தலைவர் ஸ்ரீ ரமேஷ் கூறினார். தாமான் ஸ்ரீ சீனார் பகுதியில் டியுக் 2 நெடுஞ்சாலையின் கட்டுமானத்தின்போது, ஸ்ரீ சீனார் மஹா முனீஸ்வரர் ஆலயத்திற்கு முறையாக அந்நிறுவனம் ஒரு மாற்று

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

ஜசெக அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்! -டாக்டர் டோமினிக் லாவ்

கோலாலம்பூர், ஏப்ரல் 30-          தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய பக்காத்தான் ஹராப்பான்  கூட்டணியை கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய் சாடினார்.  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஆளும் நடப்பு அரசாங்கம் போதிய ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கூறியிருந்ததை மேற்கோள் காட்டி வெளியிட்ட அறிக்கையில்  டோமினிக் லாவ் இதனைக்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

பேரா அரசின் ஏற்பாட்டில் பரிவு உதவித்திட்டத்திற்கு 18,000 பேர் தகுதி

ஈப்போ ஏப்ரல் 30- பேரா மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டிலான பேரா பரிவுத் திட்டத்திற்கு இதுவரை 18,000 பேர் தகுதி பெற்றுள்ளனர். இத்தகவலை பேரா மந்திரிபுசார் டத்தோஸ்ரீ அஹ்மத் ஃபைசால் வெளியிட்டார். பரிவு உதவித்திட்ட அடையாள அட்டையை பெற்றவர்களில் பெரும்பாலும் பத்தாம் பாடாங் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என அஹ்மத் ஃபைசால் தெரிவித்தார். தகுதி பெற்ற அனைவருக்கும் மாநில சமூக நலத்துறை பரிவு அட்டையை வழங்கும். உண்மையிலேயே இந்த உதவி தேவைப்படுவோருக்கு மட்டுமே

மேலும் படிக்க