செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 7, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2019 > ஜூலை
முதன்மைச் செய்திகள்

கடற்படை பயிற்சி மாணவர் கொலை – தற்காத்து வாதிட 18 மாணவர்களுக்கு உத்தரவு !

கோலாலம்பூர், ஜூலை.31 - கடற்படை பயிற்சி மாணவன் சுல்பர்ஹான் ஒஸ்மான் சுல்கர்னைன் கொலைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படும் 18 மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக் கழக மாணவர்கள், தங்களை தற்காத்து வாதிட கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கு போதிய முகாந்திரங்களைக் கொண்டிருப்பதை வாதித் தரப்பு நிரூபித்தப் பின்னர் நீதிபதி டத்தோ அஸ்மான் அப்துல்லா இவ்வாறுத் தெரிவித்திருக்கிறார். இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்போரில், 23 வயதுடைய முஹமட் அக்மால் அகிப் மட்டுமே,

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

அரியணை அமர்ந்த மாமன்னருக்கு மேலவை வாழ்த்து !

கோலாலம்பூர், ஜூலை.31-- நாட்டின் 16 ஆவது மாமன்னராக நேற்று செவ்வாய்க்கிழமை அரியணை அமர்ந்த, மாமன்னர்  அல் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தாபா பில்லா ஷாவுக்கும் பேரரசியார் துங்கு ஹாஜா அசிசா அமினா மைமுனா இஸ்காண்டாரியாவுக்கும் மேலவை இன்று தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது. சுல்தான் அப்துல்லாவின் பிறந்த நாளிலேயே, முழு மலாய் அரச சம்பிரதாயப்படி அதிகாரப்பூர்வ சடங்கில், நாட்டின் 16 ஆவது மாமன்னராக அரியணை அமர்ந்த வைபவம் மிகவும் சிறப்பு

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

முதல் 6 மாதங்களில் 12 ஆயிரத்து 476 கோடி செலவு !

கோலாலம்பூர், ஜூலை.31 - இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் , நாட்டின் நிர்வாக மற்றும் மேம்பாட்டு செலவுகள், 2019-ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்திற்கு ஏற்ப பதிவாகி இருக்கிறது. 12 ஆயிரத்து 476 கோடியே 90 லட்சம் ரிங்கிட் அல்லது 48.01 விழுக்காடு நிர்வாக செலவிற்கும், இரண்டாயிரத்து 376 கோடியே 30 லட்சம் ரிங்கிட் அல்லது 43.34 விழுக்காடு மேம்பாட்டு செலவிற்கும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நிதித்துறை துணை அமைச்சர் டத்தோ அமிருடின்

மேலும் படிக்க
கலை உலகம்

இந்தியன் 2 – ல் மாற்றம் – ரவிவர்மனுக்குப் பதில் புதிய ஒளிப்பதிவாளர் !

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னா் கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் வெளியானப் படம் இந்தியன். ஊழல், லஞ்சம் ஆகிய தளங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியான இப்படத்திற்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்திற்கு பின்னா் கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. கடந்த ஜனவரி மாதம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு ஆரம்பித்த வேகத்திலேயே சில நாட்களில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 10ஆம்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

சிலாங்கூர் – கூட்டரசுப் பிரதேச இந்திய வர்த்தக இயக்கத்தின் ஸீரோ டு ஹீரோ விருது பெறுகிறார் டத்தோஸ்ரீ ஜெயேந்திரன்

கோலாலம்பூர், ஜூலை 31- படிவம் 3 கல்வியோடு பள்ளி வாழ்க்கைக்கு முழுக்கு போட்டவர். ஒரு நிறுவனத்தில் சாதாரண ஓடும் பிள்ளை (டிஸ்பேட்ச்) வேலையில் வெறும் 400 வெள்ளி சம்பளத்தில் வாழ்க்கையை தொடங்கியவர். இன்று இவரது வளர்ச்சி பார்ப்பவர்களை மலைக்க வைக்கிறது. மெரிடைம் நெட்வொர்க் சென். பெர்ஹாட் எனும் ஒரு நிறுவனத்திற்கு சொந்தக்காரராக வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார். இவரது வர்த்தகமோ ஏற்றுமதி - இறக்குமதி தொழிலைச் சார்ந்தது. தினசரி சரக்குக் கப்பலோடு வர்த்தகத்தில்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

பாஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடா? 

கோலாலம்பூர், ஜூலை 31- எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலுக்காக பாஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு உடன்பாடு காணப்பட்டுள்ளதாக கூறப்படுவதை அம்னோ மறுத்துள்ளது. அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு விவகாரத்தில் 50க்கு 50 என்ற நிலையில் இணக்கம் காணப்பட்டதாக வெளியான தகவலை அவ்விரு கட்சிகளின் தலைமை செயலாளர்களான டான்ஸ்ரீ அனுவார் மூசா மற்றும் தக்கியுடின் ஹசான் மறுத்தனர். அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கிடையிலான சாசனத்தை இவ்விரு கட்சிகளையும் சேர்ந்த

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

16ஆவது மாமன்னராக சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தபா பிலா ஷா அரியணையில் அமர்ந்தார்!

கோலாலம்பூர் ஜூலை 31- நாட்டின் 16 ஆவது மாமன்னராக சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தபா பிலா ஷா அரியணையில் அமர்ந்தார். மலாய் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு சடங்கின்படி அவரது அரியணை அமரும் நிகழ்வு நடைபெற்றது. 60 வயதான அப்துல்லா மாமன்னருக்கான சடங்குப் பூர்வமான அதிகாரப்பூர்வ உடை அணிந்திருந்தார். நாட்டின் ஐக்கியத்தை சீர்குலைக்க கூடிய மற்றும் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தக்கூடிய விவகாரங்களை எழுப்புவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென மாட்சிமை தங்கிய

மேலும் படிக்க