வியாழக்கிழமை, ஏப்ரல் 2, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2019 > அக்டோபர்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

வீ ஜெக் செங்கிற்கு பாஸ் கட்சி ஆதரவு

கோலாலம்பூர், அக்டோபர் 31- தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் வீ ஜெக் செங்கிற்கு பாஸ் கட்சி ஆதரவு தெரிவிக்கும் என அதன் தலைமைச் செயலாளர் தக்யுடின் ஹசான் கூறியுள்ளார். இதனை பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹடி அவாங்கும் வரவேற்பதாக தக்யுடின் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். எதிர்வரும் 2ஆம் தேதி சனிக்கிழமை பொன்தியான் ஜூபில் இந்தான் சுல்தான் இப்ராஹிம் மண்டபத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் – தே.மு சார்பில் மசீசாவின் வீ ஜெக் சேங் போட்டியிடுவார்

பொன்தியான், அக்டோபர் 31- எதிர்வரும் நவம்பர் 16ஆம் தேதி நடைபெறவுள்ள தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் மசீசாவின் வீ ஜெக் சேங் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜோகூரின் தேசிய முன்னணி தலைவர் ஹஸ்னி முகமட் நேற்று செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். ஜோகூர் மாநில அம்னோ தொடர்பு குழு செயலாளர் டத்தோ ஷம்சூல் பாரி ஜமாலி, தஞ்சோங் பியாய் அம்னோ தொகுதி தலைவர் டத்தோ ஜெப்ரிடின்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

பத்துமலை திருத்தலத்திற்கு உக்ரேனின் வெளியுறவு துணை அமைச்சர் பாராட்டு

கோலாலம்பூர், அக்டோபர் 31- மலேசியாவில் பார்க்க தவற விடக்கூடாத இடம் பத்துமலை என உக்ரேனின் வெளியுறவு துணை அமைச்சர் செர்ஜி கிஸ்லிட்ஸ்யா தெரிவித்திருக்கிறார். உக்ரேனிலிருந்து  அதிகாரத்துவ தூதுக்குழு இன்று காலை அதன் துணை வெளியுறவு அமைச்சர்  செர்ஜி கிஸ்லிட்ஸ்யா, மலேசியாவிற்கான உக்ரேன்  தூதர் அலெக்சாண்டர் நெச்சிடாயிலோ தூதர்  ஆகியோர் தலைமையிலான குழு இந்நாட்டிற்கு வருகைப்புரிந்திருக்கின்றனர். மலேசியாவின் உக்ரைன் தூதரகத்தின் முதல் நிலை செயலாளர் விக்டர் கிபல்னிக் மற்றும் தூதரக பிரச்சினைகளுக்கான இரண்டாவது செயலாளரான கட்டெரினா ஷோர்னிகோவா, உக்ரைன் வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய-பசிபிக் வட்டாரத்தின்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

எம்ஏசிசி ஆணையருடன் கோலாலம்பூர் இந்திய வர்த்தக சபை சந்திப்பு

கோலாலம்பூர், அக்.26- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள புவான் லத்தீஃபா கோயாவுடன்  கோலாலம்பூர் மற்றும் இந்திய வர்த்தக சபை செயற்குழு மரியாதை நிமித்தம் சந்திப்பு ஒன்றை நடத்தியது. தலைவர் டத்தோ ஆர். ராமநாதன் தலைமையிலான இப்பேராளர் குழுவில் உதவித் தலைவர் டி.செல்வம், கௌரவ தலைமைச் செயலாளர்  நிவாஸ் ராகவன், துணை தலைமைச் செயலாளர் டோனி கிளிஃபெர்ட் மற்றும் பொருளாளர் குமரகுரு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

நான் பிரதமராக நீடித்திருப்பதே எதிர்க்கட்சிகளின் விருப்பம் –துன் மகாதீர்

அஸ்காபாட், அக்டோபர் 29- தமது பிரதமர் பதவியை பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மன்றமே தீர்மானிக்கும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். அடுத்த பொதுத் தேர்தல் வரை தாமே பிரதமராக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பரிந்துரைத்தாகவும் அதுவே அவர்களின் விருப்பமாகும் என்றும் கூறினார். இதனை பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மன்றமே தீர்மானிக்கும் என்று துர்க்மெனிஸ்தானிற்கு அலுவல் பயணம் மேற்கொண்ட அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுர்ஜித்தின் உடல் மீட்பு

திருச்சி, அக்டோபர் 29- திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சுர்ஜித் 4 நாட்களுக்கு ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். அவனை மீட்க பல்வேறு மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. சுர்ஜித்தை ரிக் இயந்திரத்தின் மூலம் மீட்கும் முயற்சி ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்கும் போது சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறு சுற்றி

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

இல்லாமை இல்லாமல் தீபாவளியைக் கொண்டாடுவோம்..!

இன்று நிறைந்திருக்கும் தீபத்தின் மங்களம் எங்கும் தங்கி இந்த தீபத் திருநாளில் அனைவர் வாழ்விலும் நன்மையைக் கொண்டுவர வேண்டும் என்று பினாங்கில் செயல்பட்டு வரும் யமுனாஸ் கேட்டரிங் & யமுனாஸ் எண்டர்பிரைஸ் உரிமையாளர் மு. வேலாயுதம் தெரிவித்தார். இதுபோன்ற பெருநாள் காலங்களில் இல்லாதவர்களையும் கவனத்தில் கொண்டு அவர்களுக்கும் உதவிட முன்வர வேண்டும் என்று அவர் தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தினார். வாழ்கை செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில்

மேலும் படிக்க
சமூகம்

பாரம்பரியத்துடன் தீபாவளியை கொண்டாடுவோம் – யு. தாமோதரன்

மலேசிய வாழ் இந்துக்கள் அனைவரும் இந்தத் தீபாவளி பண்டிகையை பாரம்பரியம் மாறாமல் கொண்டாடுவோம் என பேரின்பம் மலேசிய இயக்கத்தின் ஆலோசகரும் தோற்றுநருமான யு. தாமோதரன் தெரிவித்தார். பிறக்கவிருக்கும் தீபாவளிக்கு ஆடம்பர செலவுகள் ஏதும் செய்யாமல் தேவையானவற்றை மட்டும் வாங்கி சிக்கனமாக கொண்டாடுவோம். அதே வேளையில், ஆதரவற்றோருக்கும் பெரியோர்களுக்கும் உதவி அவர்களுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடுவோம் என தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

மேலும் படிக்க
சமூகம்

வளமிக்க தீபாவளியைக் கொண்டாடுவோம் -டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன்

இந்துக்களிடையே சிறப்பு வாய்ந்த இந்த தீபாவளி பண்டிகையை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார். தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இந்த தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடும் அதே வேளையில் சிக்கனமாகவும் கொண்டாட வேண்டும் என தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறினார். பகமையை மறந்து குடும்பத்தார், உற்றார் உறவினர். அண்டை அயலாருடன்

மேலும் படிக்க
சமூகம்

அறியாமையை அகற்றும் தீபாவளி – டான்ஸ்ரீ டத்தோ சோமசுந்தரம்

தீப ஒளி இருளை அகற்றி வெளிச்சத்தைத் தருவதைப் போல் நம்மிடையே உள்ள அறியாமை எனும் இருளை அகற்றி மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடுவோம் என தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர்.சோமசுந்தரம் தெரிவித்தார் தீப ஒளி பிறருக்கு வெளிச்சம் தந்து வழிகாட்டுவது போல் நாமும் பிறருக்குப் பயன்பட வேண்டும் என்பதை தீபாவளி உணர்த்துகின்றது. பட்டாசு வெடித்து புத்தாடை அணிந்து, வீட்டுக்கு வரும் விருந்தினர்களை தித்திப்புப் பண்டங்கள் தந்து

மேலும் படிக்க