வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2019 > நவம்பர்
சமூகம்முதன்மைச் செய்திகள்

யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகளால் மீண்டும் தலை நிமிர்ந்தன தமிழ்ப்பள்ளிகள்

கோலாலம்பூர், நவம்பர் 21- இன்று வெளியிடப்பட்ட யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகளால் நமது தமிழ்ப்பள்ளிகளின் நிலை மீண்டும் உயர்ந்துள்ளது. தமிழ்ப்பள்ளிகளின் பெருமையை மேலும் உயர்த்திப் பிடிக்கும் வகையில் இவ்வாண்டு நமது மாணவர்கன் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் 8A, 7A, 6A பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழ்ப்பள்ளிகளின் ஒட்டுமொத்த யூபிஎஸ்ஆர் தேர்ச்சி விகிதம்  68.9 %ஆக இருந்தது. இவ்வாண்டு அதன் எண்ணிக்கை 78.51%ஆக

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

கோலாலம்பூர் & சிலாங்கூர் இந்திய வர்த்தக சபை – எச்ஆர்டிஎஃப் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பயிற்சி

கோலாலம்பூர், நவ.21- ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒவ்வொரு ஊழியரும் அவசியம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருக்கும் மனித வள மேம்பாட்டு நிதியகம் (எச்ஆர்டிஎஃப்) கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சபையுடன் இணைந்து விழிப்புணர்வு பயிற்சி ஒன்றை  நடத்தியது. இந்நிகழ்ச்சி தலைநகர், ஜாலான் துவாங்கு அப்துல் ரஷ்மானில் அமைந்த கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சபை அலுவலக பயிற்சி அறையில் நடைபெற்றது. மனித வள

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

இலங்கை: தம்பி அதிபர்; அண்ணன் பிரதமர்

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை அதிபர் கோத்தபாய ராஜபக்சே நியமித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்றார். இலங்கையின் 7-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்கே, நாடாளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை இருக்கிறது.

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

அடிப் மரண விசாரணை; சாட்சிகளிடம் பொய்களைக் கண்டறியும் கருவி பயன்படுத்தப்படவுள்ளது

கோலாலம்பூர், நவ.21- தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மரண விசாரணைக்கு உதவும் வகையில், விளக்கத்தை பெறுவதற்காக அழைக்கப்படவுள்ள 7 முதன்மை சாட்சியாளர்களிடம் பொய்களைக் கண்டறியும் கருவி (பாலிகிராஃப் சோதனை) பயன்படுத்தப்படவுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. அந்த 7 பேரும், கடந்தாண்டு நவம்பர் 27ஆம் தேதி சிலாங்கூர், சுபாங் ஜெயா யூ.எஸ்.ஜே 25-இல் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு வெளியே நிகழ்ந்தபோது, அங்கு இருந்ததாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

அஸ்மின் மீது ஒழுங்கு நடவடிக்கை இல்லை! -பி.கே.ஆர்

கோலாலம்பூர், நவ.20- பி.கே.ஆரின் கூட்டத்திற்கு வர தவறிய அதன் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாது. மாறாக, தேசிய முன்னணியின் சுமார் 30 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பை நடத்தியது குறித்து விளக்கம் அளிப்பதற்கு, அவருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக அதன் தொடர்பு பிரிவு இயக்குநர் ஃபாமி ஃபாட்சில் தெரிவித்துள்ளார். பி.கே.ஆரின் தலைவர்களில் ஒருவராக விளங்கும் அஸ்மின் அலி, அரசியல் பிரிவு கூட்டம் உள்பட கட்சியின் அனைத்து

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

தே.மு. பிரதிநிதிகளுடன் சந்திப்பு; பி.கே.ஆர். கூட்டத்தைப் புறக்கணித்த அஸ்மின் அலி

கோலாலம்பூர், நவ.20- தேசிய முன்னணியின் சுமார் 30 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பை நடத்தியது குறித்து விவாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பி.கே.ஆர். கட்சியின் அரசியல் பிரிவு கூட்டத்திற்கு, அக்கட்சியின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, உதவித் தலைவர் ஸூராய்டா கமாருடின் ஆகிய இருவரும் வருகைப் புரியவில்லை. அந்த சந்திப்பு குறித்து விளக்கம் அளிப்பதற்கு, அஸ்மின் அலி புதன்கிழமை நடைபெறும் கூட்டத்திற்கு வருகைப் புரிய வேண்டுமென அக்கட்சியின் தலைவரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

அமைச்சரவையில் மாற்றம்! -துன் மகாதீர்

பெட்டாலிங் ஜெயா, நவ.20- ஜொகூர், தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தோல்வியைத் தொடர்ந்து, அமைச்சரவையில் மறுசீரமைப்பை மேற்கொள்வதை பரிசீலிக்க தயாராக இருப்பதாக, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். அமைச்சர்களின் அடைவுநிலையை தாம் மறு ஆய்வு செய்யவிருப்பதாகவும், இன்று பெர்சாத்து கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியுள்ளார். அந்த மறுசீரமைப்பு நாளையே நடந்திடாது. நடப்பிலுள்ள அமைச்சர்களின் அடைவுநிலை மற்றும் ஆற்றலை மறு ஆய்வு செய்த பிறகு, அமைச்சரவையை

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

பிரதமர் பதவியிலிருந்து என்னை நீக்கலாம்! துன் மகாதீர்

பெட்டாலிங் ஜெயா, நவ.20- ஜொகூர், தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தோல்வியைத் தொடர்ந்து, பிரதமர் பொறுப்பை துன் டாக்டர் மகாதீர் முகமட் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைக்க வேண்டுமென பல தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்த வலியுறுத்தல்களுக்கு துன் மகாதீர் இன்று பதிலளித்துள்ளார். தம்மை பிரதமர் பதவியிலிருந்து விலக்குவது பக்காத்தான் ஹாராப்பான் தலைவர்கள் மன்றத்தின் முடிவை பொறுத்தது. அவர்கள் அவ்வாறு விரும்பினால், தன்னை அப்பொறுப்பிலிருந்து நீக்கலாம் என இன்றும் பெட்டாலிங்

மேலும் படிக்க
விளையாட்டு

பொச்சடினோவை நீக்கியது டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் !

லண்டன், நவ.20 - டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் நிர்வாகி பொறுப்பில் இருந்து மவுரிசியோ பொச்சடினோவை அதிரடியாக நீக்கியுள்ளார் அதன் உரிமையாளர் டேனியல் லெவி. இந்த பருவத்தில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் தற்போது 14 புள்ளிகளுடன் 14 ஆவது இடத்தில் உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் நிர்வாகம், பொச்சடினோவை அதிரடியாக நீக்கியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் நிர்வாகியாக பொறுப்பேற்ற பொச்சடினோ

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

கருடாவை வென்றது ஹரிமாவ் மலாயா !

கோலாலம்பூர், நவ.20 - 2022 உலகக் கிண்ணம் / 2023 ஆசிய கிண்ண கால்பந்துப் போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் மலேசியா 2 - 0 என்ற கோல்களில் தனது பரம வைரியான இந்தோனேசியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் மலேசியா  9 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த மாதம் ஜக்கார்த்தாவில்  3-  2 என்ற கோல்களில் இந்தோனேசியாவை வீழ்த்திய மலேசியா , செவ்வாய்கிழமை இரவு 70

மேலும் படிக்க