திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2020 > பிப்ரவரி
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020 : பாடல் திறன் போட்டி

மின்னல் பண்பலை, 2020-ஆம் ஆண்டுக்கான பாடல் திறன் போட்டியை மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்துள்ளது. கூடிய விரைவில் தொடங்கவிருக்கும் இந்த போட்டியில் மலேசியர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். ஆனால் இது சில விதிமுறைகளுக்கு உட்பட்டது. நன்கு பாடும் ஆற்றல் உங்களிடம் உள்ளதா? அதுவும் 16 முதல் 30 வயதுக்கு உட்பட்டவரா நீங்கள் ? அப்படியென்றால் நீங்கள் தாராளமாக இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். உங்களை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் அதற்கு

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களவைக்குக் கிடையாது – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் மக்களவையின் சிறப்புக் கூட்டத்தில் அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என துன் டாக்டர் மகாதீர் அறிவித்திருக்கிறார். எனினும் மலேசிய அரசியலமைப்பு சட்டம் ஒரு பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை மக்களவைக்கு வழங்கவில்லை என நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிவித்திருக்கிறார். “அரசியல் அமைப்பு சட்டம் 43 (2) (a) விதியின்படி நாட்டின் மாமன்னரைத் தவிர வேறு எந்த அமைப்புக்கோ, நபருக்கோ பிரதமரை நியமிக்கும் அதிகாரம் இல்லை” என்பதையும்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

மகாதீர் விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டதா?

கோலாலம்பூர் பிப்ரவரி 28- மலேசியாவின் இடைக்காலப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முன்னெடுக்கும் நடவடிக்கைக்குத் தொடர் எதிர்ப்புகள் வருவதை அடுத்து அவர் விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று வியாழக்கிழமை அரண்மனையில் மாமன்னரை சந்தித்த இடைக்காலப் பிரதமர் துன் மகாதீர், எவருக்கும் ஆட்சியமைக்கப் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காத பட்சத்தில் நாடாளுமன்றத்தை கூட்டி முடிவு செய்ய வேண்டும் என்ற தகவலை வெளியிட்டிருந்தார். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எவரும்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

நெகிழி, பாலித்தீன் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்ப்போம் !

(ஆதவன்) சிம்மோர், பிப். 28- இயற்கையைப் போற்றும் வகையிலும் இயற்கைக்கு நன்றி செலுத்து வகையிலும் இனி வரும் காலங்களில் நெகிழி, பாலித்தீன் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என தேசிய வகை சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழாவில் வலியுறுத்தப்பட்டது. மலேசியத் திராவிடக் கழகம் சுங்கை சிப்புட் கிளையின் ஆதரவில் சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா இனிதே நடைபெற்றது. பல பாரம்பரிய போட்டிகளுடன் மிகவும் விமரிசையாகக்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

அரசை கவிழ்க்க நினைத்தவர்களுக்கு மகாதீர் துணை போயிருக்கக்கூடாது! – டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

கோலாலம்பூர், பிப். 28- நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தவர்களை நீக்கிவிட்டு நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தைத் தொடர்ந்து இருக்கலாம் என பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும் நீர் நிலம் இயற்கை வள அமைச்சின் முன்னாள் அமைச்சருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறியிருக்கின்றார். இதனிடையே பொதுத் தேர்தலை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணியில் இருந்து விலகி இருக்கும் பெர்சத்து கட்சி முழுமையாக அழிந்து வடும்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

பாரதி சொன்னபடி ஓடி விளையாடுவோம் ! உடலினை உறுதி செய்வோம் !

(ஆதவன்) மாலிம் நாவார், பிப். 28- மாலிம் நாவார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி அளவிலான குறுக்கோட்டப் போட்டி சிறப்பான முறையில் நடந்தேறியது. பள்ளியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். பள்ளியின் தலைமையாசிரியர் சுசிலா கில்டா இப்போட்டியினைத் தொடக்கி வைத்தார். இப்போட்டி ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடனும் தன்னம்பிக்கையையுடனும் இப்போட்டியில் சிறப்பாக கலந்து கொண்டர். போட்டியின்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

பீடோர் வட்டார இந்து சங்கத்தின் இலவச மருத்துவப் பரிசோதனையும் குருதிக்கொடை நிகழ்ச்சியும்

பீடோர், பிப். 28- (ஆதவன்) உடல்நல விழிப்புணர்வு மலேசியர்கள் மத்தியில் மிகக் குறைவாகவே உள்ளது. அதனை கருத்தில் கொண்டுதான் மலேசிய இந்து சங்கம் பீடோர் வட்டாரப் பேரவையின் இலவச உடல்நல முகாமும் குருதிக் கொடை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்திருந்தது. சூழ்நிலைக்கு ஏற்ப மனிதர்கள் உடல்நலச் சிக்கலை எதிர் கொள்கிறார்கள். குறிப்பாக அவர்கள் வேலை செய்யும் இடங்களைப் பொறுத்து உலநலமும் அமைகின்றது என அவர் தெரிவித்தார். இளமைக் காலத்தில் தொடர்ந்து வேலை

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

26.02.2020 என்ன நடக்கின்றது மலேசிய அரசியலில்.. விரைவுச் செய்திகள்

அஸ்மின் குழுவினர் பெர்சத்துவில் இணைகிறார்கள்? பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது அதன் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி, முன்னாள் உதவித் தலைவர் ஸுரைடா கமாருடின் ஆகியோருடன் இதர 9 நாடாளுமன்ற உறிப்பினர்கள் பெர்சத்து கட்சியில் இணைய விருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது. இவர்கள் அனைவரும் துன் டாக்டர் மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டுமென ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் அன்வாருக்கு பெரும்பான்மையை நிரூபிப்பதில் நெருக்கடி ஏற்படுத்த இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

25.02.2020 என்ன நடக்கின்றது மலேசிய அரசியலில்! விரைவுச் செய்திகளின் தொகுப்பு

பெரும்பான்மை உண்டு: நாளை அறிவிப்போம்! நம்பிக்கை கூட்டணி நம்பிக்கை கூட்டணியில் உள்ள உறுப்பு கட்சிகளின் சந்திப்பு கூட்டம் தற்போது பிகேஆர் தலைமையகத்தில் நடந்து வருகிறது. நம்பிக்கை கூட்டணியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் தளத்தில் தொடர்ந்து இணைந்திருப்போம் என்ற வாக்கியத்துடன் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில் பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஜனநாயக செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அமானா கட்சியின் தலைவர் மாட் சாபு,

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்? துணைப்பிரதமர் முக்ரிஸ் மகாதீர்!

புத்ராஜெயா பிப். 25- நாட்டின் 8ஆவது பிரதமராகப் பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பொறுப்பேற்பார் எனக் கூறப்படும் நிலையில் துணைப் பிரதமராக டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் நியமிக்கப்படுவார் எனப் பரவலாகப் பேசப்படுகின்றது. ஆனால் இது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் அல்ல. துன் டாக்டர் மகாதீர் அம்னோ கட்சியுடன் கூட்டணி வைக்க விருப்பம் இல்லாத காரணத்தினால் பதவி விலகினார் என நேற்று ஜனநாயக செயல் கட்சியின் தலைமைச் செயலாளர்

மேலும் படிக்க