ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > எங்களிடம் பாரபட்சம் கிடையாது – டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் 
முதன்மைச் செய்திகள்

எங்களிடம் பாரபட்சம் கிடையாது – டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் 

கோலாலம்பூர், டிச.6-
உள்துறை அமைச்சின் கீழ் செயல்படும் அனைத்து இலாகாக்கள் மற்றும் நிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்ளும் அமலாக்க பணியில் அமைச்சு பாரபட்சம் கிடையாது. அமலாக்க மற்றும் தொடர் நடவடிக்கை ரீதியில் உள்துறை அமைச்சு பாகுபாடின்றி நல்ல அணுகுமுறையையே கடைபிடிக்கிறது என துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறினார்.

உள்துறை அமைச்சின் கீழ் செயல்படும் இலாகாக்கள் மற்றும் நிறுவனங்கள் சட்ட விதிகளுக்கேற்ப தங்கள் கடமைகளை மேற்கொள்ளும் என உள்துறை அமைச்சருமான ஸாஹிட் ஹமிடி விளக்கமளித்தார்.

இன்று புத்ரா உலக வாணிப மையத்தில் 1 கேடிஎன்@ பிடபிள்யூடிசி கழக கண்காட்சியைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

மக்களின் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து பணிகளையும் உட்படுத்தியதே உள்துறை அமைச்சு. மேற்கோளாக, தேசிய பதிவிலாகாவின் பிறப்புச் சான்றிதழ் வெளியிடுவது தொடங்கி இறப்புச் சான்றிதழ் வெளியிடுவது வரை அனைத்து பணிகளையும் இத்துறையே மேற்கொண்டு வருகிறது என்று அவர் கூறினார்.
எனவே, உள்துறை அமைச்சு குறித்து பொது மக்களிடையே தவறான கருத்துகளை வெளியிடக் கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் உள்துறை துணையமைச்சர் டத்தோ மாசிர் குஜாட், உள்துறை தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ அல்வி இப்ராகிம் மற்றும் குடிநுழைவு துறை தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தாஃபார் அலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன