நீலாய், டிச 8-

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 43.6ஆவது கிலோ மீட்டர் தொலைவில் இரு டிரேயிலர் லோரிகள் விபத்துக்குள்ளானதில் ஒரு டிரேயிலர் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று காலை 7.00 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் முகமட் ஜிடின் (வயது 27) எனும் டிரேயிலர் ஓட்டுநருக்கு தலையிலும் உடம்பிலும் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.

முன்னே சென்று கொண்டிருந்த டிரேயிலரை அதன் பின் வந்து கொண்டிருந்த மற்றொரு டிரேயிலர் லோரி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்தவுடன் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். டிரேயிலர் லோரியின் இடுக்கில் மாட்டிக் கொண்டவரை வெளியே கொண்டு வருவதற்கு 27 நிமிடங்கள் பிடித்தது. விபத்தில் பலியானவரின் உடல் சவப்பரிசோதனைக்காக சிரம்பான் துவாங்கு ஜபார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.