அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > புதிய ஆட்டக்காரர்கள் குறித்து வூட்வெர்டை நேரடியாக சந்திக்கிறார் மொரின்ஹோ
விளையாட்டு

புதிய ஆட்டக்காரர்கள் குறித்து வூட்வெர்டை நேரடியாக சந்திக்கிறார் மொரின்ஹோ

நியூ யார்க், ஜூலை.22 –

மென்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப்புக்கு புதிய ஆட்டக்காரர்களை வாங்குவது தொடர்பில் நிர்வாகி ஜோசே மொரின்ஹோ, அந்த கிளப்பின் நிர்வாக அதிகாரி எட் வூட்வெர்டுடன் நேரடியாக சந்திப்பை நடத்த தயாராகி வருகிறார் என ஊடங்கள் கூறுகின்றன.

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியின் புதிய பருவத்தில் தமக்கு நான்கு புதிய ஆட்டக்காரர்கள் தேவைப்படுவதாக மொரின்ஹோ இதற்கு முன்னர் அறிவித்திருந்தார். அதில் சுவிடனின் தற்காப்பு ஆட்டக்காரர் விக்டர் லின்டாலொப்பையும், பெல்ஜியமின் தாக்குதல் ஆட்டக்காரர் ரொமேலு லுக்காகூவை மட்டுமே மென்செஸ்டர் யுனைடெட் விலைக்கு வாங்கியுள்ளது.

மேலும் இரண்டு ஆட்டக்காரர்களை வாங்க மென்செஸ்டர் யுனைடெட் திட்டமிட்டிருந்தாலும் சந்தையில் ஆட்டக்காரர்களின் விலை பல மடங்கு உயர்த்தப்படுவது மொரின்ஹோவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மென்செஸ்டர் யுனைடெட்டின் சுற்றுப்பயணங்களில் கலந்து கொள்ளும் எட் வூட்வெர்ட் இம்முறை இங்கிலாந்தில் இருந்து ஆட்டக்காரர்களை வாங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

எனினும் புதிய ஆட்டக்காரர்களைக் கொண்டு வருவதில் எந்த முன்னேறமும் காணப்படாததால் வூட்வெர்டுடன் நேரடியாக பேச மொரின்ஹோ தயாராகி வருகிறார். இன்னும் இரண்டு ஆட்டக்காரர்களை வாங்க ஆவல் கொண்டிருந்தாலும் அந்த எண்ணிக்கை ஒன்றாக குறைய வாய்ப்பும் உள்ளது என மொரின்ஹோ தெரிவித்துள்ளார்.

டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரின் எரிக் டயர், செல்சியின் நெமாஞ்சா மாத்திச், இண்டர் மிலானின் ஈவான் பிரிசெச் ஆகியோர் மென்செஸ்டர் யுனைடெட் கிளப்புடன் தொடர்ந்து இணைத்து பேசப்படுகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன