அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > கோலாலம்பூர்- சிங்கப்பூர் இடையே அதிவிரைவு ரயில் சேவை
முதன்மைச் செய்திகள்

கோலாலம்பூர்- சிங்கப்பூர் இடையே அதிவிரைவு ரயில் சேவை

கோலாலம்பூர், டிச.8- 
பண்டார் மலேசியா- சிங்கப்பூர், ஜூரோங் ஈஸ்ட் இடையே எச்எஸ்ஆர் எனும் ரயில் சேவை திட்டம் தொடங்கப்படவுள்ளது என மைஎச்எஸ்ஆர் காப்பரேஷன் நிறுவனம் அதிகாரப்பூர்வ வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒருமுறை மலேசியாவின் அனைத்து எச்எஸ்ஆர் நிலையங்களிலும் இந்த ரயில் சேவை செயல்படும்.

அடுத்தாண்டு தொடங்கப்படும் இத்திட்டம் வரும் 2026ஆம் ஆண்டு நிறைவடையும். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பொது மக்களிடமிருந்து கருத்துகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

எங்கும் நிற்காத இந்த விரைவு ரயில் சேவையின் வழி 90 நிமிடங்களில் சிங்கப்பூரை அடைந்து விடலாம். சுமார் 350 கி.மீட்டர் தூரம் கொண்ட 8 நிலையங்களில் பண்டார் மலேசியா, பாங்கி, புத்ராஜெயா, சிரம்பான், மலாக்கா, மூவார், பத்து பஹாட், இஸ்கண்டார் புத்ரி, ஜூரோங் ஈஸ்ட் (சிங்கப்பூர்) ஆகியவை அடங்கும்.

பண்டார் மலேசியாவில் தொடங்கி இஸ்கண்டார் புத்ரி வரையிலான உள்ளூர் சேவை 120 நிமிடங்களுக்கு மேற்கொள்ளப்படும். அதனை தொடர்ந்து இஸ்கண்டார் புத்ரியிலிருந்து மற்றுமொரு விரைவு ரயில் சேவையைப் பயன்படுத்தி 15 நிமிடத்தில் ஜூரோங் ஈஸ்டை அடைந்து விடலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன