ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > செல்சியில் இணைந்தார் மொராத்தா
விளையாட்டு

செல்சியில் இணைந்தார் மொராத்தா

லண்டன், ஜூலை.22 –

ரியல் மெட்ரிட் கால்பந்து கிளப்பின் தாக்குதல் ஆட்டக்காரர் அல்வாரோ மொராத்தா, இங்கிலீஷ் பிரீமியர் லீக் வெற்றியாளரான செல்சி கால்பந்து கிளப்பில் வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார்.

செல்சி கால்பந்து கிளப்புடனான மருத்துவ சோதனையில் தேர்ச்சிப் பெற்றதை அடுத்து மொராத்தா , அந்த கிளப்புடன் ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். மொராத்தாவை வாங்க செல்சி, 8 கோடி பவுண்ட் தொகையை ரியல் மெட்ரிட்டுக்கு வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியின் புதிய பருவத்தை முன்னிட்டு செல்சி தற்போது சீனாவில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாய்கிழமை சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பாயேர்ன் மூனிக் கிளப்புக்கு எதிரான ஆட்டத்தில் மொராத்தா முதல் முறையாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

செல்சி கால்பந்து கிளப்பில் விளையாட தாம் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக மொராத்தா தெரிவித்துள்ளார். கடந்த பருவத்தில் ரியல் மெட்ரிட் கிளப்புடான 43 ஆட்டங்களில் மொராத்தா 20 கோல்களைப் போட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. அதேவேளையில் ஸ்பெயின் தேசிய கால்பந்து அணியில் 9 கோல்களைப் புகுத்தியுள்ளார்.

இந்த பருவத்தில் இங்கிலீஷ் பிரீமியர் லீக், ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டிகளில் மொராத்தா மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என செல்சி விளையாட்டு இயக்குனர் மைக்கல் எமனாலொ நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். மொராத்தாவின் வருகையை அடுத்து டியாகோ கோஸ்தா, செல்சி கிளப்பில் இருந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன