சென்னை, ஜூலை.22 –

தளபதி விஜய்  நடிப்பில் அட்லீ இயக்கிவரும் மெர்சல் படத்தின் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற உள்ளதாக என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சல் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மெர்சல் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் விஜயுடன், காஜல் அகர்வால், மொட்டை ராஜேந்திரன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.சென்னையில் பல பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், கிளைமாக்ஸ் காட்சிகள் ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் படமாக்கப்பட்டது.

முதல் முறையாக அட்லீயின்  இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விஜய் நடித்த உதயா, அழகிய தமிழ்மகன் திரைப்படங்களுக்கு மூன்றாவது முறையாக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த உதயா திரைப்படத்தின் பாடல்களை காட்டிலும் 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த அழகிய தமிழ்மகன் பாடல்களுக்கு விஜய் ரசிகர்களிடையே ஆதரவு கிடைத்தது. இந்நிலையில் 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ரஹ்மான், விஜய் நடிக்கும் படத்துக்கு இசையமைப்பதால் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.